வாவ் வங்கதேசம்.. இலங்கைக்கு எதிராக பரபர வெற்றி.. பாம்பு டான்ஸ் ஆடிய ரஹீம்!

Posted By:

கொழும்பு: இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் நேற்று வங்கதேசத்திற்கும், இலங்கைக்கும் இடையில் நடந்த போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்று இருக்கிறது.

இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்.

இலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.இதற்கு நிதாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

இலங்கை பேட்டிங்

இலங்கை பேட்டிங்

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியது. ரன் ரேட் 10க்கும் குறையாமல் பார்த்துக் கொண்டது. குஷால் பெரெரா 74ரன்களை 48 பந்தில் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடக்கம். இதனால் 20 ஓவர் முடிவில் இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.

சூப்பர் ரஹீம்

சூப்பர் ரஹீம்

இந்த போட்டியில் ரஹீம் ஆடியது ருத்ர தாண்டவம். 72ரன்களை 35 பந்தில் எடுத்தார். இதில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடக்கம். அதேபோல் தமீம் இஃக்பால் 47, லித்தோன் தாஸ் 43 ரன்கள் எடுத்தனர். இதனால் வங்கதேச அணி மிக எளிதாக 215 ரன்கள் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

பெரிய இலக்கு

பெரிய இலக்கு

வங்கதேச அணியின் இந்த வெற்றி அவர்களுக்கு கிரிக்கெட் வரலாற்றில் நடக்காத ஒன்று. டி-20ல் பெரிய ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்றதில் தற்போது வங்கதேசம் 4 வது இடத்தை பிடித்து இருக்கிறது. 2008ல் ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு எதிராக 244 ரன்னை துரத்தி வெற்றி பெற்றதே அதிகபட்ச சேசிங் வெற்றி ஆகும்.

கொண்டாட தெரியுமா?

என்னதான் பங்களாதேஷ் பங்காளிகள் சிறப்பாக விளையாடினாலும், வெற்றி பெற்ற பின் அதை கொண்டாட தெரியாமல் மாட்டிக் கொள்கிறார்கள். நேற்றைய போட்டியில் கூட ரஹீம் வின்னிங் ஷாட் அடித்துவிட்டு பாம்பு போல செய்தது பெரிய அளவில் வைரல் ஆனது. பலரும் அவரை கலாய்த்து கொண்டு இருக்கிறார்கள்.

Story first published: Sunday, March 11, 2018, 9:28 [IST]
Other articles published on Mar 11, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற