வங்கதேசத்துக்கு எதிரான டி-20... இந்தியா அபார வெற்றி!

Posted By:
வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா- வீடியோ

கொழும்பு: இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதும் டி-20 போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்று இருக்கிறது.

இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்.

T-20 match between India and Bangladesh in Sri Lanka

இலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.இதற்கு நிதாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

முதல் போட்டியில் இந்தியாவின் அனுபவமற்ற அணி இலங்கையை எதிர்கொண்டது. ஆனால் அங்கு மிகவும் மோசமாக ஆடி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் தற்போது வங்கதேசத்துக்கு எதிராக இன்று இந்தியா விளையாடும் இரண்டாவது போட்டி நடக்க இருக்கிறது. இதில் இந்தியா தோற்கும் பட்சத்தில் இறுதிப்போட்டிக்கு செல்வது மிகவும் கடினமாகும்.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது.

ஜெயதேவ் உனட்கட் 3 விக்கெட் எடுத்தார். தமிழக வீரர் விஜய் சங்கர் 2 விக்கெட் எடுத்தார். சரத்துள் தாக்குர், சாஹல் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் வங்கதேசம் 8 விக்கெட்டுக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன்பின் களமிறங்கிய இந்தியா ஆரம்பத்திலேயே சொதப்பியது. இந்த போட்டியிலும் ரோகித், பாண்ட் மோசமாக ஆடினார்கள். ஆனால் தவான் மீண்டும் கை கொடுத்தார்.

இதனால் 4 விக்கெட் இழப்பில் 18.4 ஓவரில் இந்தியா எளிதாக 139 ரன் எடுத்து வென்றது.

Story first published: Thursday, March 8, 2018, 17:41 [IST]
Other articles published on Mar 8, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற