For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மகுடம் யாருக்கு? டி20 உலக கோப்பை இறுதி போட்டி.. இந்த அணிக்கு மட்டும் இருக்கும் கூடுதல் பலம்

துபாய்: இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சம பலத்துடன் இருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரண்டு அணிகளும் இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எதிர்கொள்கின்றன.

துபாய் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி மாலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் இன்றைப் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நியூசிலாந்து அணி

நியூசிலாந்து அணி

இரண்டு அணிகளும் டி20 உலகக் கோப்பையை இதுவரை வென்றதில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி இருந்த நியூசிலாந்து ஒரே ஆண்டில் தனது இரண்டாவது ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. சூப்பர் 12 சுற்றில் 5இல் 4 போட்டிகளில் வென்றிருந்த நியூசிலாந்து அணி, அரையிறுதியில் இங்கிலாந்தைத் தோற்கடித்திருந்தது. லார்ட்ஸில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பழிவாங்கும் வகையில் இது இருந்தது.

ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியா அணி

ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரைத் தொடங்கும் போது ஆஸ்திரேலியா வலுவான அணியாக இல்லை. முதல்முறையாக ஐசிசி தொடர் ஒன்றில் ஆஸ்திரேலியாவால் கோப்பையை வெல்ல முடியாது என கி்ட்டதட்ட அனைவரும் முடிவு செய்துவிட்டனர். சூப்பர் 12 சுற்றில் கடினமான க்ரூப்பில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெறாது என்று பல வல்லுநர்களும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், ஐசிசி தொடர் என்பதாலோ என்னவோ பழைய பன்னீர் செல்வமாக வந்து மற்ற அணிகளை அலறவிட்டது ஆஸ்திரேலியா. அரையிறுதி போட்டியிலும் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் சொதப்ப இறுதிப் போட்டிக்குள் காலடி எடுத்து வைத்தது.

யாருக்கு வாய்ப்பு

யாருக்கு வாய்ப்பு

பொதுவாகவே ஐசிசி தொடர்களில் மிகவும் வெற்றிகரமான அணியாக ஆஸ்திரேலியாவே இருந்துள்ளது. மறுபுறம் நியூசிலாந்து தற்போது அட்டகாசமான ஃபார்மில் உள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், இப்போது டி20 உலகக் கோப்பை எனத் தொடர்ந்து 3ஆவது முறையாக ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது. இரண்டு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதால் போட்டியில் சுவாரசியத்திற்குப் பஞ்சம் இருக்காது.

சம பலம்

சம பலம்

இந்த டி20 உலகக் கோப்பையில் இதுவரை இரண்டு அணிகளும் கிட்டதட்ட ஒரே மாதிரியான திறனை வெளிப்படுத்தியுள்ளது. சூப்பர் 12 சுற்றில் இரண்டு அணிகளுமே 5இல் 4 போட்டிகளில் வென்று, ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தது. அதேபோல அரையிறுதி போட்டியில் எதிரணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. ஆனால், இது இன்று இறுதிப் போட்டியில் மாறலாம். இரண்டு அணிகளுமே இதுவரை டி20 உலகக் கோப்பையை வெல்லவில்லை என்பதால் இன்றைய போட்டியில் தங்கள் முழு திறனை வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

டாஸ் முக்கியம்

டாஸ் முக்கியம்

துபாயில் நடைபெறும் போட்டி என்பதால் இதிலும் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும். அங்குக் கடைசியாக நடைபெற்ற 10 போட்டிகளில் 9இல் சேஸ் செய்யும் அணியே வென்றுள்ளது. எனவே, டாஸ் வெல்லும் அணிகள் கண்ணை மூடிக் கொண்டு பவுலிங்கை தான் தேர்வு செய்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆஸ்திரேலியாவின் பிளேயிங் 11ல் மாற்றம் இருக்காது. அதேநேரம் நியூசிலாந்தின் டெவோன் கான்வே காயமடைந்துள்ளதால் அவருக்குப் பதிலாக டிம் சிஃபெர்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து

இரண்டு அணிகளும் இதுவரை 14 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 9 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் 4 போட்டிகளில் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. அதேநேரம் டி20 உலகக் கோப்பைகளில் இரண்டு அணிகளும் ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து அணியே வென்றுள்ளது. துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

Story first published: Monday, November 15, 2021, 0:15 [IST]
Other articles published on Nov 15, 2021
English summary
New Zealand face Australia in the title clash at T20 World Cup Final. T20 World cup latest news in Tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X