For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘ஐயோ பாவம்’.. இந்திய வீரர்களுக்கு இப்படி ஒரு பிரச்னை இருந்ததா?.. சொதப்பலுக்கான காரணத்தை உடைத்த கோச்!

அமீரகம்: இந்திய அணியின் தொடர் தோல்விகளுக்கா காரணம் ஐபிஎல் தொடரா என்ற விவாதத்திற்கு பவுலிங் கோச் பாரத் அருண் பதிலளித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி செயல்பாடுகள் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது.

“நூலிழையில் இருக்கும் அரையிறுதி வாய்ப்பு” அடித்துக்கொள்ளும் 3 அணி.. இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் உள்ளதா“நூலிழையில் இருக்கும் அரையிறுதி வாய்ப்பு” அடித்துக்கொள்ளும் 3 அணி.. இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் உள்ளதா

முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும், 2வது போட்டியில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை இந்திய அணி பெற்றது.

பரிதாப நிலைமை

பரிதாப நிலைமை

இந்த முறை கோப்பையை வெல்லும் என அனைவராலும் நம்பப்பட்ட இந்திய அணி அரையிறுதி செல்வதற்கே வேறு ஒரு அணியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதாவது இன்று நடைபெற்று வரும் ஆஃப்கானிஸ்தான் - நியூசிலாந்து போட்டியில் ஒருவேளை ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டால் இந்திய அணி அரையிறுதிக்கு சென்றுவிடும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக அமைந்துவிட்டன.

மீண்டும் சூடான ரசிகர்கள்

மீண்டும் சூடான ரசிகர்கள்

இது ஒருபுறம் இருக்க, இந்திய அணியின் இந்த சொதப்பலான ஆட்டத்திற்கு ஐபிஎல் தொடர் தான் காரணம் என மீண்டும் ரசிகர்கள் விமர்சனங்களை பரப்ப தொடங்கிவிட்டனர். அதாவது ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிவிட்டால் பெரிதல்ல, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது தான் முக்கியம். அயல்நாட்டு வீரர்கள், ஐபிஎல்-ல் விளையாடி இந்திய அணியின் பலத்தை புரிந்துக்கொள்கின்றனர் எனக்குற்றம் சாட்டி வருகின்றனர்.

பயிற்சியாளர் விளக்கம்

பயிற்சியாளர் விளக்கம்

இந்நிலையில் இந்தியாவின் மோசமான ஃபார்முக்கு என்ன காரணம் என்பது குறித்து பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் பதிலளித்துள்ளார். அதில், கிரிக்கெட்டில் டாஸ் பெரியளவில் வெற்றியாளரை தீர்மானிக்காது. ஆனால் அமீரகத்தில் டாஸ் மிகப்பெரிய சாதகமாக அமைகீறது. முதலில் பேட்டிங் செய்வதற்கும், 2வதாக பேட்டிங் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிகின்றன. டி20 போன்ற குறைந்த ஓவர் போட்டிகளில் இந்த பிரச்னை இருக்கவே கூடாது.

இடைவெளி வேண்டும்

இடைவெளி வேண்டும்

இதே போல ஐபிஎல் தான் காரணமா என விமர்சனம் எழுகிறது. அது உண்மை தான். ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்ட பிறகு கடந்த 6 மாதங்களாக இந்திய வீரர்களுக்கு ஓய்வே இல்லை. ஐபிஎல் தொடர், நியூசிலாந்து போட்டி, இங்கிலாந்து தொடர் என தொடர்ந்து 6 மாதங்களாக இந்திய வீரர்கள் பயோ பபுளுக்குள்ளேயே இருக்கின்றனர். வீட்டிற்கே செல்லவில்லை. இது அவர்களின் ஆட்டத்தை பாதிக்கும். ஐபிஎல் தொடருக்கும் - உலகக்கோப்பைக்கும் சிறிது இடைவெளி இருந்திருந்தால் இந்திய வீரர்களுக்கு சிறப்பானதாக அமைந்திருக்கலாம்.

Story first published: Sunday, November 7, 2021, 23:48 [IST]
Other articles published on Nov 7, 2021
English summary
Bowling coach Bharat Arun gives explanation on Team india's poor performance in T20 Worldcup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X