
3வது ஒருநாள் ஆட்டம்
இந்திய அணியை பொறுத்தவரையில் நிறைய காய பாதிப்புகள் உள்ளன. கேப்டன் ரோகித் சர்மா, முகமது சென் ஆகிய இருவரும் காயத்தின் காரணமாக சமீபத்தில் விலகினர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். நட்சத்திர பவுலர்களான முகமது ஷமி மற்றும் தீபக் சஹார் ஆகியோரும் காயத்தினால் விலகியுள்ளனர்.

டாப் ஆர்டர் பேட்டிங்
இதனால் தற்போது வெறும் 13 வீரர்கள் மட்டுமே 3வது ஒருநாள் போட்டியில் ஆடுவதற்கு உள்ளனர். இவர்களில் இருந்து தான் டிராவிட் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்ய வேண்டும். ஓப்பனிங்கில் ரோகித் இல்லாததால் கே.எல்.ராகுல் - ஷிகர் தவான் களமிறங்கவுள்ளனர். முதல் விக்கெட்டிற்கு வழக்கம் போல விராட் கோலியும், 2வது விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயரும் விளையாடுகின்றனர்.

2 வீரர்கள் பெஞ்ச்
மிடில் ஆர்டரில் தான் 3 வீரர்கள் போட்டிப்போட்டு வருகின்றனர். ராகுல் திரிபாதி, இஷான் கிஷான், ராஜத் பட்டிதார் ஆகிய 3 வீரர்களும் 5வது இடத்திற்காக உள்ளனர். ஆனால் இவர்களில் இருந்து இஷான் கிஷானுக்கு வாய்ப்பு தரவே டிராவிட் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இவரைதொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் நம்பிக்கை தருகிறார்.

பவுலிங் யூனிட்
சுழற்பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் அக்ஷர் பட்டேல் மற்றும் சபாஷ் அகமது ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்த காத்துள்ளனர். வேகப்பந்துவீச்சில் தீபக் சஹார் இல்லாததால் உம்ரான் மாலிக், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகிய 3 பேர் மட்டுமே சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ப்ளேயிங் 11 விவரம்
கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்