For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 அதிரடி மாற்றங்கள்.. தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டி.. ப்ளேயிங் 11ல் ரோகித் மாஸ் முடிவு!

மும்பை: தென்னாப்பிரிக்க அணியுடனான தொடருக்கு இந்திய அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை மாலை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 நட்சத்திர வீரர்கள் இல்லை..ஷமிக்கு கூடுதல் ஓய்வு..தென்னாப்பிரிக்க தொடரில் பிசிசிஐ எடுக்கும் ரிஸ்க்!2 நட்சத்திர வீரர்கள் இல்லை..ஷமிக்கு கூடுதல் ஓய்வு..தென்னாப்பிரிக்க தொடரில் பிசிசிஐ எடுக்கும் ரிஸ்க்!

தென்னாப்பிரிக்க தொடர்

தென்னாப்பிரிக்க தொடர்

ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணி அதே புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது. இதே போல டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் விளையாடப்போகும் கடைசி தொடரும் இதுதான் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இப்படிப்பட்ட தொடரில் இந்தியாவின் ப்ளேயிங் 11ல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

3 வீரர்களுக்கு ஓய்வு

3 வீரர்களுக்கு ஓய்வு

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென்னாப்பிரிக்க தொடர் முழுவதுமாக ஓய்வு தரப்பட்டுள்ளது. தீபக் ஹூடாவும் காயத்தினால் வெளியேறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த முகமது ஷமிக்கு தயாராக கூடுதல் நேரம் தேவை எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் அணியில் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளனர்.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

ஓப்பனிங்கை பொறுத்தவரையில் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் செட்டாகிவிட்டனர். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலியும், அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் களமிறங்கவுள்ளனர். 5வது வீரராக ஹர்திக் இல்லாததால் ரிஷப் பண்ட் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது. 6வது வீரராக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படலாம்.

பந்துவீச்சு படை

பந்துவீச்சு படை

பவுலிங்கை பொறுத்தவரையில் சுழற்பந்துவீச்சாளர்கள் யுவேந்திர சாஹல் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் கூட்டணி அமைக்கவுள்ளனர். வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இதனால் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் கூட்டணி அமைக்கவுள்ளனர். ஹர்ஷல் பட்டேலுக்கு பதிலாக தீபக் சஹார் களமிறங்கவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அக்‌ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், யுவேந்திர சாஹல்

Story first published: Tuesday, September 27, 2022, 20:45 [IST]
Other articles published on Sep 27, 2022
English summary
3 Major changes in Team India predicted Playing 11 for 1st T20 match against South africa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X