For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டி.. அரையிறுதி வாய்ப்பு வந்த சிக்கல்.. சமாளிப்பாரா விராட் கோலி?

அமீரகம்: பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்த பின்னர் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு சிக்கலாக மாறியுள்ளது.

Recommended Video

India படுதோல்விக்கு என்ன காரணம்? Virat Kohli வேதனை| IND Vs PAK | Oneindia Tamil

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று பாகிஸ்தான் அணியிடன் இந்தியா தோல்வியை சந்தித்தது.

உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த தொடரில் நீடிப்பதிலேயே தற்போது குழப்பம் எழுந்துள்ளது.

 இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.

2 குழுக்கள்

2 குழுக்கள்

டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் உள்ள 12 அணிகளையும் வகைப்படுத்தப்படும். அதாவது ஒவ்வொரு குழுவிற்கும் தலா 6 அணிகள் என 2 குழுக்கள் பிரிக்கப்படுகின்றன. இதில் குரூப் ஏ- வில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இலங்கை அணிகள் விளையாடுகின்றன. குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஆட்ட முறைகள்

ஆட்ட முறைகள்

இந்த இரண்டு குழுக்களின் போட்டிகள் முடிவில், ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும். முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும் என்றால் குறைந்தது 3 வெற்றிகளை பெற்றிருக்க வேண்டும். அந்தவகையில் இந்திய அணி தனக்குள்ள 5 ஆட்டங்களில் முதல் தோல்வியை சந்தித்து விட்டது. இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்தியாவுக்கு இன்னும், நியூசிலாந்து, நமிபியா, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்கலாந்து அணிகளுடன் போட்டியுள்ளது. இதில் நியூசிலாந்து உடனான போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்திய அணிக்கு நியூசிலாந்தை தவிர்த்து மற்ற 3 அணிகளுமே வெற்றி வாய்ப்பு அதிகம். சுலபமாக 3 வெற்றி கிடைத்துவிடும். ஆனால் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கும் அந்த 3 அணிகள் சுலபமானது தான். ஒருவேளை பாகிஸ்தான் அந்த 3 அணிகளையும் வீழ்த்திவிட்டால் 4 வெற்றிகளுடன் முதலிடம் பிடிக்கும்.

நியூசிலாந்து

நியூசிலாந்து

ஒருவேளை இந்திய அணியை நியூசிலாந்து வீழ்த்திவிட்டால், மற்ற 3 அணிகளையும் சுலபமாக வீழ்த்திவிடும். இதனால் நியூசிலாந்து அணியும் 4 வெற்றிகளுடன் 2வது இடத்திற்கு சென்றுவிடும். அதன்பின்னர் 3 வெற்றி பெற்றும் இந்திய அணிக்கு பலனளில்லை. எனவே பெரும் அணிகளான பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்தை வீழ்த்தியே ஆக வேண்டும். இதில் பாகிஸ்தானிடம் தோல்வி வந்துவிட்டது. எனவே அடுத்ததாக நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணியின் அரையிறுதிப்போட்டி பிரகாசமாகும்.

Story first published: Monday, October 25, 2021, 21:10 [IST]
Other articles published on Oct 25, 2021
English summary
Team India's Semi final chances are in trouble after the loss against pakistan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X