"மச்சி.. இனிமேதான் ஓபன் தி பாட்டில்".. கம்பீர் கலகலா பேச்சு!

Posted By:

கொல்கத்தா: ஒரு வழியாக பிளே ஆப் பிரிவுக்குள் நுழைந்து விட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த நிலையில், இனிமேல்தான் உண்மையான போட்டியே தொடங்குகிறது என்று படு தெம்பாக பேசியுள்ளார் கொல்கத்தா கேப்டன் கெளதம் கம்பீர்.

இதுதாங்க கிரிக்கெட்.. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. அடுத்தடுத்து 3 போட்டிகளில் டக் அவுட் ஆனவர் கம்பீர். அவரது அணியும் கூட தடுமாறியபடிதான் இருந்தது. ஆனால் இன்று பாருங்கள், கம்பீரமாக 3வது அணியாக பிளே ஆப் பிரிவுக்குள் வந்து விட்டது கொல்கத்தா.

அந்த அணியின் ராபின் உத்தப்பா, திடீரென விஸ்வரூபம் எடுத்து தொடர்ந்து சிறப்பாக ஆடி இந்தத் தொடரில் அதிகபட்ச ரன்களைக் குவித்த வீரராக மட்டுமல்லாமல், தனது அணியையும் பிளே ஆப் பிரிவுக்குக் கூட்டி வந்து விட்டார்.

கேப்டன் கம்பீர் இதனால் படு குஷியாகியுள்ளார். மேலும், இனிமேல்தான் உண்மையான போட்டிகளே தொடங்கப் போகிறது என்றும் பேசியுள்ளார்.

அடுத்தடுத்து 6 வெற்றி

அடுத்தடுத்து 6 வெற்றி

அடுத்தடுத்து தொடர்ந்து 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது கொல்கத்தா. இது ஏதோ ப்ளூக்கால் வந்ததல்ல என்றும் தங்களது கடின உழைப்பே இதற்குக் காரணம் என்றும் கம்பீர் கூறுகிறார்.

இதே மாதிரி போக வேண்டும்

இதே மாதிரி போக வேண்டும்

கம்பீர் மேலும் கூறுகையில், இதை இப்படியே விட்டு விடக் கூடாது. தொடர்ந்து இதேபோல சிறப்பாக ஆட வேண்டியது முக்கியம். உண்மையான போட்டியே இனிமேல் தொடங்குகிறது என்றார் கம்பீர்.

4 தொடர் தோல்விக்குப் பின்

4 தொடர் தோல்விக்குப் பின்

முதலில் மோதிய 7 போட்டிகளில் 2ல் மட்டுமே கொல்கத்தா வென்றிருந்தது. அடுத்து 4 போட்டிகளில் தொடர்ந்து தோற்றது. இதையடுத்து தற்போது 6 போட்டிகளில் அதிரடியாக வென்றுள்ளது. அதுவும் தொடர்ச்சியாக.

டீம் ஒர்க் பாஸ்...

டீம் ஒர்க் பாஸ்...

எனக்கு டீம் ஒர்க் மீதுதான் நம்பிக்கை அதிகம். இப்போதும் அதுதான் நடந்துள்ளது. எனக்கு இப்போது சற்று நிம்மதியாக உள்ளது. திருப்தியாக உணர்கிறேன். போதிய அளவுக்கு எங்களது திறமையை வெளிக் கொண்டு வந்து விட்டோம் என்று நினைக்கிறேன். இனிமேல் முழுவேகத்தில் நாங்கள் செயல்படுவோம் என்றார் கம்பீர்.

அபார ராபின்.. அட்டகா நரீன்

அபார ராபின்.. அட்டகா நரீன்

கொல்கத்தாவின் ராபின் உத்தப்பாதான் தற்போது இந்தத் தொடரில் அதிக அளவிலான ரன்களைக் குவித்த வீரராக உருவெடுத்துள்ளார். அவர் மேக்ஸ்வெல்லை முந்தியுள்ளார். அதேபோல அதிகபட்ச விக்கெட்களை வீழ்த்தியவர் கொல்கத்தாவின் சுனில் நரீன் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 23, 2014, 16:13 [IST]
Other articles published on May 23, 2014

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற