'வீ மிஸ் யு நெஹ்ரா...' எதிரணிக்கு மரண பயத்தைக் காட்டிய இடது கை சூறாவளி!

Posted By:

டெல்லி: இந்தியாவின் சிறந்த பவுலர்களில் ஒருவரான நெஹ்ரா இந்திய அணியில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். நவம்பர் 1 அன்று நியூசிலாந்துவுடன் நடக்க இருக்கும் டி20 போட்டியே அவர் பங்குபெறும் கடைசி சர்வதேச போட்டியாகும்.

இந்தியாவின் மிக முக்கியமான பவுலர்களில் ஒருவரான இவர் பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கிறார். இந்தியாவிலேயே மிக அதிக கேப்டன்களுக்கு கீழ் விளையாடியது இவர்தான்.

இவர் சிறப்பாக விளையாடிய டாப் 5 போட்டிகளின் தொகுப்பு இது. இது எல்லாமே எதிரணிக்கு மரண பயத்தை காட்டிய போட்டிகள் ஆகும்.

 நியூசிலாந்தை திணறடித்த நெஹ்ரா

நியூசிலாந்தை திணறடித்த நெஹ்ரா

எந்த கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்க முடியாத போட்டிகளில் ஒன்று இந்தப் போட்டியாகும். காரணம் இந்தியா அடைந்த மோசமான தோல்வி. இந்தப் போட்டியில் 288 அடித்திருந்த நியூசிலாந்தின் ரன்களை எடுக்க முடியாமல் இந்தியா 88 லேயே ஆல் அவுட் ஆனது. ஆனாலும் இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியை திணற அடித்திருப்பார் நெஹ்ரா. வெறும் 47 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்திருப்பார். இந்தப் போட்டி 2010ல் இலங்கையில் நடைபெற்றது. இந்த ஆசிய கோப்பை தொடர் இவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது.

 இலங்கையிடம் மோதிய நெஹ்ரா

இலங்கையிடம் மோதிய நெஹ்ரா

2010 ல் இலங்கையில் நடைபெற்ற அதே தொடரில் இன்னொரு பெஸ்ட் பர்பார்மன்ஸை கொடுத்தார் நெஹ்ரா. இலங்கையை எப்போதும் துச்சமாக நினைக்கும் இவர் , அந்தப் போட்டியிலும் மாஸ் காட்டி இருந்தார். ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டத்தில் வெறும் 268 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது இந்திய அணி. கண்டிப்பாக தோற்றுவிடுவோம் என இந்திய ரசிகர்கள் நினைத்த இந்தப் போட்டியில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார் நெஹ்ரா. இவரது இந்த ருத்ர தாண்டவத்தால் அந்த முறை ஆசிய கோப்பையை இந்தியா வீட்டுக்கு எடுத்து வந்தது.

 அப்பவே நெஹ்ரா அப்படி

அப்பவே நெஹ்ரா அப்படி

2003ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி பந்து வீச்சாளர்களில் ஒருவர் நெஹ்ரா. அந்த உலகப் கோப்பையை நாம் வெல்வில்லை என்றாலும் அந்தத் தொடர் முழுக்கவும் நெஹ்ரா சிறப்பாக ஆடியிருந்தார். மிகவும் குறைவான பவுலர்களுடன் இறங்கிய இந்தப் போட்டியில் இந்தியாவை மேலே தூக்கி நிறுத்தியது நெஹ்ராதான்.இவர் இந்தப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

 மீண்டும் இலங்கையை ஓடவிட்ட நெஹ்ரா

மீண்டும் இலங்கையை ஓடவிட்ட நெஹ்ரா

நெஹ்ரா எப்போதும் போல 2005ல் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் நன்றாக பார்பார்ம் செய்திருந்தார். 2005ல் இலங்கையில் நடைபெற்ற இந்த இந்தியன் ஆயில் கோப்பை போட்டியில் நெஹ்ரா ஆடியது வேற லெவல் ஆட்டம். 59 ரன்கள் விட்டுக்கொடுத்த நெஹ்ரா இதில் 6 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இயல்பாகவே பவுலிங் பிட்சாக இருக்கும் கொழும்பு மைதானம் நெஹ்ராவின் வேகத்திற்கு இன்னும் வேகம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

 தி பெஸ்ட் நெஹ்ரா

தி பெஸ்ட் நெஹ்ரா

2003 உலக கோப்பையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டி, உலக கிரிக்கெட் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத ஒன்று. அந்த உலக கோப்பைக்கு முன்பாக, வரிசையாக அந்நிய மண்ணில் தோல்வி அடைந்த இந்திய அணி, தென் ஆப்பபிரிக்காவில் நடந்த அந்த உலக கோப்பையில், சக்கைபோடு போட்டு கெத்து காட்டியது. இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய நெஹ்ரா வெறும் 23 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்தார். பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்திலேயே நெஹ்ராவின் பந்தில் விக்கெட்டை இழந்து திரும்பிய காட்சிகளை பார்க்க கண் கோடி வேண்டும். ஜாகீர் கானும், நெஹ்ராவும் போட்டி போட்டு பந்தை மணிக்கு 145 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் தொடர்ச்சியாக வீசியது இந்த உலக கோப்பையில்தான். அதிலும் நெஹ்ராதான் டாப். கிட்டத்தட்ட 150 கி.மீவரை அவரது வேகம் உச்சம் தொட்டது. இந்திய பவுலரின் சாதனை வேகம் அது. இதனால் பைனல் வரை சென்றது இந்தியா.

இதுவரை எடுத்ததிலேயே இவருடைய பெஸ்ட் இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டிதான். யோ-யோ தேர்வு முறையில் உடல் தகுதியை நிரூபித்திருக்கும் நெஹ்ரா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசியாக இன்னொரு பெஸ்ட் கொடுப்பாரா...? பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Thursday, October 12, 2017, 16:58 [IST]
Other articles published on Oct 12, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற