முதல் டி20ல் நியூசி.யை வதம் செய்த இந்தியா.. வெற்றியோடு விடை பெற்றார் நெஹ்ரா

Posted By:

டெல்லி: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று ஆரம்பித்துள்ளது. முதல் டி-20 போட்டி டெல்லி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர். இதன்முலம் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு இந்தியா 202 ரன்கள் குவித்தது.

203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது. இதன் காரணமாக 20 ஓவருக்கு 149 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தோற்றது.

 நியூசிலாந்து இந்தியா மோதும் டி-20

நியூசிலாந்து இந்தியா மோதும் டி-20

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று ஆரம்பித்தது. முதல் டி-20 போட்டி டெல்லி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் பெரிதாக மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் முதல் முறையாக களம் கண்டார். அதேபோல் நெஹ்ரா கடைசி போட்டியில் விளையாடுவது உறுதியானது. அவர் 11 பேர் அணியில் இடம்பிடித்தார் . இதையடுத்த இந்திய அணி 6 பவுலர்களுடன் களம் இறங்கியது .

 இந்தியா அதிரடி

இந்தியா அதிரடி

இந்த போட்டியில் நியுசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து விளையாடியது. ஆனால் நியூசிலாந்து பவுலர்களால் இந்திய தொடக்க ஜோடி ரோஹித், தவான் இணையின் அதிரடியை சமாளிக்க முடியவில்லை. சிக்ஸும், ஃபோரும் பறக்கவிட்டனர். அதிரடியாக விளையாடிய ரோஹித் 55 பந்துகளுக்கு 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தவான் 52 பந்துகளுக்கு 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஹர்திக் பாண்டியா டக் அவுட் ஆனார். கோஹ்லியும் அதிரடியாக 26 ரன்கள் எடுத்து இருந்தார். டோணி சிக்சருடன் 7 ரன்கள் எடுத்தார்.

 கலக்கிய பவுலிங்

கலக்கிய பவுலிங்

இந்திய அணியின் பவுலிங் தொடக்கமே முதலே சிறப்பாக இருந்தது புவனேஷ்வர் குமாரின் ஸ்விங்கை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. சாஹல் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். கடைசி போட்டியில் விளையாடிய நெஹ்ராவும் சிறப்பாக பந்து வீசினார். இந்த போட்டியில் சாஹல், பட்டேல் தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், பும்ரா, பாண்டியா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து திணறியது. இதன் காரணமாக 20 ஓவருக்கு 149 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தோற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. கடைசி போட்டி விளையாடிய நெஹ்ராவுக்கு டெல்லி வெற்றியோடு விடை கொடுத்தது. நியூசிக்கு எதிராக இந்தியா பெறும் முதலாவது டி20 வெற்றி இது என்பது சிறப்பு.

Story first published: Wednesday, November 1, 2017, 11:29 [IST]
Other articles published on Nov 1, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற