For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலத்தில் அதிக லாபம் அடைந்தவர்கள் யார் யார்??.. சாம் கரண், ஸ்டோக்ஸ் இல்லை.. டாப் 5 பேர் இதோ

கொச்சி: ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு கோடிகளை கொட்டி வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்ட சாம் கரணை விட, சர்வதேச போட்டிகளிலேயே அறிமுகமாதவர்கள் கூட மிகப்பெரும் லாபத்தை பெற்றுள்ளனர்.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் நேற்று பரபரப்புடன் நடைபெற்று முடிந்தது. இதில் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ரூ.15 கோடிக்கும் ஒரே ஒரு வீரருக்காக செலவளித்து ஆச்சரியம் தந்தனர்.

ஆல்ரவுண்டர்கள் சாம் கரண் ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணியும், கேமரூன் கிரீனை ரூ. 17.50 கோடிக்கு மும்பை அணியும் ஏலம் எடுத்தது. உலகக்கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்திருந்தது.

ஐபிஎல் தொடருக்கு ஆபத்து.. உரிமையாளர்களால் ஏற்படப்போகும் பெரும் நஷ்டம்.. பிசிசிஐ அவசர ஆலோசனை! ஐபிஎல் தொடருக்கு ஆபத்து.. உரிமையாளர்களால் ஏற்படப்போகும் பெரும் நஷ்டம்.. பிசிசிஐ அவசர ஆலோசனை!

 சுவாரஸ்யமான பட்டியல்

சுவாரஸ்யமான பட்டியல்

இவர்களெல்லாமே ஏற்கனவே பெரிய தொகைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்கள். ஆனால் இந்த ஏலத்தில் அதிக லாபத்தை ஈட்டிய வீரர்கள் நிறைய உள்ளனர். அவர்கள் குறித்து இதில் பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலில் இருப்பவர் இந்திய வீரர் முகேஷ் குமார் தான். மேற்கு வங்கதத்தை சேர்ந்த இந்த வேகப்பந்துவீச்சாளர் ரூ. 20 லட்சம் என்ற அடிப்படை தொகையில் ஏலம் விடப்பட்டார். ஆனால் டெல்லி அணி இவரை ஏலம் எடுத்தது ரூ.5.5 கோடிக்கு ஆகும். சுமார் 2750 சதவீதம் இது உயர்வாகும்.

 இந்திய வீரர்கள் அசத்தல்

இந்திய வீரர்கள் அசத்தல்

இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் ஷிவம் மாவி தான். 140கிமீ வேகத்தில் வீசக்கூடிய ஷிவம் மாவி ரூ.40 லட்சத்திற்கு ஏலம்விடப்பட்ட சூழலில் குஜராத் அணி அவரை ரூ.6 கோடிக்கு வாங்கியது. அதாவது சுமார் 1500 சதவீதம் அதிகமாகும். இவருக்கு அடுத்தபடியாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த விவ்ராந்த் சர்மா ரூ.20 லட்சம் என்ற ஆரம்ப தொகையில் இருந்து ரூ. 2.6 கோடிக்கு ஐதராபாத்தால் ஏலம் எடுக்கப்பட்டார். இது 1300 சதவீதம் அதிகமாகும்.

சாம் கரணின் இடம்

சாம் கரணின் இடம்

இப்பட்டியலில் 4வது இடத்தை தான் சாம் கரண் பிடிக்கிறார். ரூ.2 கோடி என்ற அடிப்படை தொகையில் தொடங்கிய இவரது ஏலம் ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. சுமார் 925 சதவீதம் அதிக தொகைக்கு சென்றுள்ளார். இவருக்கு பின் மயங்க் டாகர் இருக்கிறார். ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடாத இவர் ரூ. 20 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட சூழலில் ஐதராபாத் அணி ரூ.1.8 கோடி கொடுத்து வாங்கியது.

பரவும் கேள்விகள்

பரவும் கேள்விகள்

ஐபிஎல் வரலாற்றில் எப்போதுமே மிகுந்த தொகை கொண்டு வாங்கப்பட்ட வீரர்கள், அதன் அழுத்தம் காரணமாகவே சொதப்புவதை ரசிகர்கள் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். இந்த முறை புதிய வரலாறு படைக்கும் அளவிற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, December 24, 2022, 20:44 [IST]
Other articles published on Dec 24, 2022
English summary
The Top 5 biggest gainers in IPL Mini Auction 2023, here is the Complete details and list
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X