For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவருக்கு இவ்வளவு தொகையா, பெரிய ரிஸ்க் எடுத்துட்டீங்க, ஆர்.சி.பிக்கு ஆஸ்திரேலிய ஜாம்பவான் எச்சரிக்கை

சென்னை: ஆர்.சி.பி அணி ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுக்கும் அளவுக்கு மேக்ஸ்வெல் சிறப்பாக இல்லை என்றும் பெரிய ரிஸ்க் என்றும் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஆர்.சி.பி அணியால் ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

சரியான ஃபார்மில் இல்லாத மேக்ஸ்வெல்லை ஏலம் எடுத்தது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஒருவரே விமர்சித்துள்ளார்.

போட்டி

போட்டி

சென்னையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆல்ரவுண்டர்களை குறிவைத்தே ஏலத்தை நகர்த்தியது. அதன்படி ஏலத்தில் கெய்லி ஜெமிசன், மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டின் ஆகிய முக்கிய வீரர்கள் எடுக்கப்பட்டனர். மூன்று பேருமே பவுலிங் ஆல் ரவுண்டர்கள். குறிப்பாக மேக்ஸ்வெல் 14.25 கோடிக்கு வாங்கப்பட்டார்.

மேக்ஸ்வெல் ஃபார்ம்

மேக்ஸ்வெல் ஃபார்ம்

மேக்ஸ்வெல் இதுவரை 9 சீசன்களில் ஆடியுள்ள மேக்ஸ்வெல், 2 சீசன்களில் மட்டுமே சிறப்பாக ஆடினார். குறிப்பாக கடந்த 2 சீசன்களில் அவரின் ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்ககாக 13 விளையாடி வெறும் 108 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். வெறும் 15.42 என்ற சராசரி மற்றும் 101.88 என்ற ஸ்டிரைக் ரேட் இருந்தது.

ரிஸ்க்

ரிஸ்க்

மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணியில் எடுத்தது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் பிராட் ஹாக், மேக்ஸ்வெல்லை ஏன் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஆர்சிபி எடுத்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரை எடுத்ததன் மூலம் ஆர்.சி.பி பெரும் ரிஸ்க்-ஐ எடுத்துள்ளது. அந்த அணி பிரார்த்தனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேக்ஸ்வெல் ஸ்பாட்

மேக்ஸ்வெல் ஸ்பாட்

மிடில் ஆர்டரை பலப்படுத்த ஆர்.சி.பி மேக்ஸ்வெல்லை எடுத்துள்ளது. தேவ்தத் பட்டிக்கல் மற்றும் கோலி ஓப்பனிங் ஆட முதல் விக்கெட்டுக்கு டிவில்லியர்ஸ் இரங்கி ஆட வேண்டும். பின்னர் மேக்ஸ்வெல் அதிரடி காட்டி ரன்களை குவிக்க வேண்டும் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, February 20, 2021, 21:17 [IST]
Other articles published on Feb 20, 2021
English summary
‘This is a Huge Risk” Brad Hogg On RCB Opting For Glenn Maxwell
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X