சென்னையில் ஐபிஎல் தொடர்: டிக்கெட் விற்பனை நாளை தொடங்குவதாக அறிவிப்பு

Written By: Hema

சென்னை: ஐபிஎல் தொடருக்கான டிக்கெட் விற்பனை நாளை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி 7 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ticket sales notice for IPL series in chennai

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

சேப்பாக்கத்தில் 10-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் காலை ஓன்பதரை மணி முதல், 12.30 மணி மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும், டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் கொடுக்கப்படமாட்டாது என்று கூறியுள்ளதுடன், டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை 1,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2,500, 4,500 ரூ.5,000, ரூ.6,500 ஆகிய விலைகளிலும் டிக்கெட் கிடைப்பதுடன், ஆன்லைன் மூலமும் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Notice that the ticket for the IPL series can be obtained online. Ticket counters at the stadium will be announced on the first day of the morning, from 12.30 pm to 2 pm to 6 pm.
Story first published: Sunday, April 1, 2018, 13:05 [IST]
Other articles published on Apr 1, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற