For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஜய் ஷங்கர் அசத்தல் அறிமுகம்.. எக்ஸ்ட்ராஸ் மழைக்கு நடுவே தூத்துக்குடியை வீழ்த்தியது சேப்பாக்!

திருநெல்வேலி : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தியது.

2019 டிஎன்பிஎல் தொடரில் லீக் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

TNPL 2019 : Chepauk Super Gillies vs Tuti Patriots match result and highlights

சேப்பாக் அணி தன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து கொள்ள இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்தது. தோல்வி அடைந்தால் நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

தூத்துக்குடி அணி பிளே ஆஃப் செல்ல முடியாது என்றாலும் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ஆடியது.

இந்திய அணி வீரர் விஜய் ஷங்கர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக தன் முதல் டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்றார். நான்காவது டிஎன்பிஎல் தொடரில் தான் அறிமுகம் ஆகிறார் விஜய் ஷங்கர். அதிலும் தொடரின் லீக் சுற்றின் கடைசி போட்டியில் தான் அவருக்கு காயம் குணமாகி ஆட வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி. அந்த அணியில் இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே பொறுப்பாக ஆடினர். கோபிநாத் 53, சசிதேவ் 27 ரன்கள் எடுத்தனர். காந்தி 15 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் தான் ரன் எடுத்தனர்.

விஜய் ஷங்கர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 19.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது சேப்பாக் அணி. 128 ரன்கள் என்ற எளிய இலக்கோடு ஆடிய தூத்துக்குடி அணி பேட்டிங் செய்ய கடினமான அந்த பிட்ச்சில் மிக மோசமாக ஆடியது.

தூத்துக்குடி அணியில் சீனிவாசன் மட்டுமே பொறுப்பாக ஆடி 50 ரன்கள் குவித்தார். சுப்ரமணிய சிவா 13 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் தான் ரன் எடுத்தனர். 18.5 ஓவரில் 95 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது தூத்துக்குடி அணி.

சேப்பாக் அணியின் அறிமுக வீரர் விஜய் ஷங்கர் தன் முதல் அறிமுக டிஎன்பிஎல் போட்டியில், தன் முதல் பந்தில் விக்கெட் எடுத்து அசத்தினார். அவர் 3.5 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். ஹரிஷ் குமார் 3, சித்தார்த் 2, பெரிய சுவாமி 2, அலெக்சாண்டர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

சேப்பாக் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தூத்துக்குடி அணி 12 எக்ஸ்ட்ராஸ், சேப்பாக் அணி 10 எக்ஸ்ட்ராஸ் கொடுத்தனர். மொத்தம் பேட்டிங் செய்த 22 வீரர்களில் 17 வீரர்களை விட ஒவ்வொரு அணி கொடுத்த எக்ஸ்ட்ராஸ் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 9, 2019, 23:09 [IST]
Other articles published on Aug 9, 2019
English summary
TNPL 2019 : Chepauk Super Gillies vs Tuti Patriots match result and highlights
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X