For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்... இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமோ?

டெல்லி :சர்வதேச அளவிலான ஒரு விளையாட்டாக மாறி வருகிறது கிரிக்கெட். ஆண்கள் கிரிக்கெட் மட்டுமே ரசிகர்களை கட்டிப்போட்ட சூழ்நிலைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது மகளிர் கிரிக்கெட்.

கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் சர்வதேச வீரர்களின் சம்பளங்கள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அவர்கள் சிக்ஸர் அடித்தால் அதற்கு ஒரு கட்டணம், பவுண்டரியை விளாசினால் ஒரு கட்டணம், சதம் அடித்தால் கேட்கவே வேண்டாம் என்பதுபோல ராக்கெட் வேகத்தில் அவர்களின் சம்பளம் உள்ளது.

சர்வதேசஅளவில் சமீப காலத்தில் கவனத்தை கவர்ந்துள்ள பெண் கிரிக்கெட் வீராங்கனைகளின் சம்பளம் குறித்து கேட்டால், அவர்கள் இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டியதன் அவசியம் தெரிகிறது.

கவனத்தை பெற்றுள்ள மகளிர்

கவனத்தை பெற்றுள்ள மகளிர்

சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தாலும், சமீப காலங்களிலேயே சிறப்பான கவனத்தை இந்திய மகளிர் பெற்று வருகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் அவர்கள் பங்கேற்ற டி20 மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை அவர்கள் சென்றது, சர்வதேச கவனத்தை அவர்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. அதில் அவர்கள் தோற்றாலும் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணமே உள்ளது.

போக வேண்டிய தூரம் அதிகம்

போக வேண்டிய தூரம் அதிகம்

சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்றுவரும் இந்திய வீரர்களின் சம்பளம் கோடிக்கணக்கில் உள்ள நிலையில், அதே அளவில் வேகத்தையும் திறமையும் காண்பித்துவரும் மகளிர் அணியினரின் சம்பளம், கண்டிப்பாக ச்சே இவ்வளவு தானா என்று நம்மை யோசிக்க வைக்கும். அந்த அளவிற்கு சொற்ப சம்பளங்களில் அவர்கள் தங்களது காலங்களை கழித்து வருகின்றனர்.

300 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தல்

300 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தல்

இந்திய அளவில் அதிக சம்பளங்களை பெறும் இந்திய மகளிரின் முதல் 5 இடங்களை பார்க்கும்போது ஐந்தாவது இடத்தில் பந்துவீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி உள்ளார். 10 டெஸ்ட்கள், 182 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி, 300 விக்கெட்டுகளை சாய்த்துள்ள இவரின் ஆண்டு வருமானம் 30 லட்சம் மட்டுமே. இவர் பிசிசிஐயின் பி கிரேட்டில் உள்ளார்.

ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம்

ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம்

சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ள இந்திய பந்துவீச்சாளர் பூனம் யாதவ், கடந்த டி20 மகளிர் உலக கோப்பை தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற காரணமாக இருந்தவர். பிசிசிஐயின் ஏ கிரேட்டில் இருந்தாலும் இவரது ஆண்டு வருமானம் 50 லட்சம் ரூபாய் மட்டுமே. வரும் நிதியாண்டில் இந்த தொகை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்த ஆளுமை

தொடர்ந்த ஆளுமை

கடந்த 2017 மகளிர் உலக கோப்பை தொடரிலிருந்து தன்னுடைய ஆளுமையை மகளிர் கிரிக்கெட்டில் வெளிப்படுத்திவரும் ஸ்மிரிதி மந்தனா பிசிசிஐயின் ஏ கிரேட்டில் உள்ளார். இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக உள்ள மந்தனா, தொடர்ந்து பேட்டிங்கில் அதகளம் புரிந்து வருபவர். இவரின் ஆண்டு வருமானம் 50 லட்சம் ரூபாய் மட்டுமே.

ஆயினும தற்போது இவர் பல விளம்பரங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2,000 ரன்களை அடித்து அசத்தல்

2,000 ரன்களை அடித்து அசத்தல்

தான் இதுவரை ஆடியுள்ள 114 டி20 போட்டிகளில் விளையாடி 2,000 ரன்களை குவித்துள்ள இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், எப்போதும் தன்னுடைய 100 சதவிகித திறமையை மைதானத்தில் வெளிப்படுத்துவார். சமீபத்தில் விளையாடிய டி20 மகளிர் உலக கோப்பை தொடரில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் பிசிசிஐயின் ஏ கிரேட்டில் உள்ள இவரது ஆண்டு வருமானம் 50 லட்சம் ரூபாய்.

Recommended Video

சச்சின் 100வது சதம் அடித்தது இன்று தான்
முதலிடத்தில் மிதாலி

முதலிடத்தில் மிதாலி

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,000 ரன்களை குவித்துள்ள மகளிர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் மிதாலி ராஜ், பிசிசிஐயின் பி கிரேட் வீராங்கனையாக 30 லட்சம் ரூபாய் மட்டுமே பெறுகிறார். ஆனால், விளம்பரங்கள் மூலம் இவருக்கு அதிகப்படியான வருமானம் வருகிறது. இதையடுத்து, அதிக சம்பளம் வாங்கும் இந்திய கிரிக்கெட் மகளிரில் இவர் முதன்மை இடத்தில் உள்ளார்.

Story first published: Monday, March 16, 2020, 17:50 [IST]
Other articles published on Mar 16, 2020
English summary
Top 5 : Highest earning India Women cricketers
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X