For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து பயணம் ரொம்ப ரிஸ்க்தான்.. ஆனால் போவது நல்லது.. சொல்கிறார் பாக். டாக்டர்

இஸ்லாமாபாத்: கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் பயணம் அபாயகரமானது. ஆனால் இந்த டூர் அவசியமானது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய டாக்டர் கூறியுள்ளார்.

3 பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவரது இந்த எச்சரிக்கை வந்துள்ளது. கொரோனா உச்சக்கட்ட பரவலில் இருக்கும்போது இந்த பயணம் ரிஸ்க்கானது என்று டாக்டர் சொஹைல் சலீம் கூறியுள்ளார். அதேசமயம், இது அவசியமானது என்றும் அவர் சொல்லியுள்ளார்.

இந்த பயணத்தால் பாகிஸ்தான் அணி மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கும் கூட ரிஸ்க் அதிகம். காரணம் இப்படிப்பட்ட சூழல் இரு அணிகளுக்குமே புதியது என்றும் டாக்டர் சலீம் எச்சரித்துள்ளார்.

3 பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா.. இங்கிலாந்துக்குக் கிளம்பும் முன்பே ஷாக்! 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா.. இங்கிலாந்துக்குக் கிளம்பும் முன்பே ஷாக்!

புது அனுபவம்

புது அனுபவம்

இதுதொடர்பாக சலீம் கூறுகையில், நாம் இப்படிப்பட்ட சூழலை இதுவரை சந்தித்ததில்லை. இதுபோன்ற சூழலில் நாம் விளையாடியதும் இல்லை. இது இரு அணிகளுக்குமே புதிய சூழல். கொரோனா பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக பரவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் ரிஸ்க் எடுப்பது சரியா என்று தெரியவில்லை. பொழுது போக்கு என்பதைத் தாண்டி உயிரையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

மக்களுக்கு ரிலாக்ஸ்

மக்களுக்கு ரிலாக்ஸ்

அதேசமயம் இப்போட்டிகள் நடந்தால் மக்களுக்கு அது நல்லதொரு மன உற்சாகமாக அமையும் என்றும் சலீம் கூறியுள்ளா். அவர் மேலும் கூறுகையில் இந்த ரிஸ்க்கையும் தாண்டி நமக்கு ஆறுதல் தரும் விஷயம், மக்களுக்கு இது உற்சாகம் தரும் என்பதுதான். ஐரோப்பிய நாடுகளில் அதனால்தான் கால்பந்து போட்டிகளை தொடங்கியுள்ளனர். பெரிய அளவில் கூட்டம் இல்லாமல், அதேசமயம், போட்டிகளையும் நடத்துகின்றனர். கிரிக்கெட்டையும் அதுபோல நடத்தலாம் என்றார் அவர்.

2 விதமா பேசுறாரே

2 விதமா பேசுறாரே

சலீம் இந்த டூர் ரிஸ்க் என்று சொல்லியுள்ளார். கூடவே மக்களுக்கு இது உற்சாகம் தரும் என்றும் சொல்லியுள்ளார். இதன் மூலம் அவர் என்னதான் சொல்ல வருகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரிஸ்க் எடுத்து போய் நாங்க விளையாடப் போறோம் என்று சொல்ல வருகிறாரா அல்லது மக்களுக்காக ரிஸ்க் எடுக்கிறோம் என்று சொல்கிறாரா என்று புரியவில்லை.

திட்டம் என்ன

திட்டம் என்ன

இதற்கிடையே, பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்குப் போனதும் அங்கு என்ன நடக்கும் என்பதை சலீம் விவரித்துள்ளார். அவர் கூறுகையில், இங்கிலாந்துக்குப் போனதும் அங்கு மீண்டும் ஒரு கொரோனா டெஸ்ட் எடுக்கப்படும். அதன் பின்னர் பயோ பாதுகாப்பு சூழலில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள். 7 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுக்கப்படும். முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பும் ஒரு டெஸ்ட் எடுக்கப்படும். யாருக்காவது பாசிட்டிவ் வந்தால் அவர் தனிமைப்படுத்தப்படுவார்.

பாதிக்கத்தான் செய்யும்

பாதிக்கத்தான் செய்யும்

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது முதலே வீரர்கள் வீடுகளுக்குள்தான் அடைந்து கிடக்கின்றனர். எனவே மன ரீதியாக அனைவருமே பலவீனமாகத்தான் இருப்பார்கள். எல்லோருக்கும் வருவதுதான் இது. பாகிஸ்தானில் பயிற்சி எடுக்க முடியாத சூழல் நிலவுவதால் எங்களது பயிற்சியை நாங்கள் இங்கிலாந்திலேயே மேற்கொள்ளவுள்ளோம் என்றார் சலீம்.

Story first published: Tuesday, June 23, 2020, 13:08 [IST]
Other articles published on Jun 23, 2020
English summary
PCB medical official says the upcoming tour of England during the coronavirus pandemic is a “big risk”
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X