For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரையும் சதம் போட விடாம 'சத்தாய்க்குதே' இந்த எமிரேட்ஸ்...!

By Veera Kumar

வெலிங்டன்: நடப்பு உலக கோப்பையில், இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தாலும், யு.ஏ.இ அணி புதுவகையான அதிருஷ்டத்தை கொண்டுள்ளது. ஆம்.. இதுவரை அந்த அணிக்கு எதிராக எந்த நாட்டு வீரரும் செஞ்சுரியே அடிக்க முடியவில்லை.

1996 உலக கோப்பையின்போது தலைகாட்டிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நீ..ண்ட இடவெளிக்கு பிறகு, நடப்பு உலக கோப்பையில் கால் பதித்துள்ளது.

இன்று ஐந்தாவது போட்டி

இன்று ஐந்தாவது போட்டி

அந்த அணி, இந்தியா உட்பட இதுவரை 4 அணிகளுக்கு எதிராக லீக் ஆட்டங்களில் மோதியது. இன்று வெலிங்டனில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்த அணி 5வது லீக் ஆட்டத்தில் மோதியது.

தொடர் தோல்விகள்

தொடர் தோல்விகள்

யு.ஏ.இ அணி ஜிம்பாப்வேக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், அயர்லாந்துக்கு எதிராக 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இந்தியாவுக்கு எதிராக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானுக்கு எதிராக 129 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்றிருந்தது.

ரன் குவித்த தென் ஆப்பிரிக்கா

ரன் குவித்த தென் ஆப்பிரிக்கா

இந்நிலையில் இன்று தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து, 341 ரன்களை குவித்துள்ளது.

ஜஸ்ட் மிஸ்

ஜஸ்ட் மிஸ்

இதுவரை எந்த போட்டியிலும் யு.ஏ.இ வெற்றிபெறவில்லை என்றபோதிலும், அந்த அணிக்கு எதிராக எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் சதம் அடிக்க முடியவில்லை. தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 99 ரன்களில் அவுட் ஆனார்.

அதிருஷ்டம்

அதிருஷ்டம்

முன்னதாக, பாகிஸ்தானின் அகமது ஷெஷாத் 93 ரன்களில் அவுட் ஆகியிருந்தார். இதை யு.ஏ.இயின் அதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல, இந்தியாவுக்கு எதிராகவும் எந்த வீரரும் இதுவரை சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, March 12, 2015, 12:52 [IST]
Other articles published on Mar 12, 2015
English summary
UAE are yet to concede a century in world cup 2015. The highest run was 99 AB de Villiers, and 93 Ahmed Shehzad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X