For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன மாதிரி பவுலிங் யா.. சிதறிய ஸ்டம்ப்.. நடுங்கிய ஷகிபுல் ஹசன்..151 கிமீ வேகத்தில் வீசிய உம்ரான்

டாக்கா : வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வேகப்பந்தவீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்துவீசி கலக்கி வருகின்றனர்.

வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், இன்று இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம், ஏதோ ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீசுவது போன்ற தோற்றத்தை கொடுத்தது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் உம்ரான் மாலிக், முகமது சிராஜ், தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்கூர் என்று 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியது.

இந்திய அணியில் 2 அதிரடி மாற்றம்..உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..வங்கதேசத்தை எதிர்கொள்ள மெகா திட்டம் இந்திய அணியில் 2 அதிரடி மாற்றம்..உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..வங்கதேசத்தை எதிர்கொள்ள மெகா திட்டம்

 முகமது சிராஜ் அதிரடி

முகமது சிராஜ் அதிரடி

ஆட்டத்தின் தொடக்கம் முதலே முகமது சிராஜ், ஆக்ரோஷமாக பந்துவீசி வங்கதேச வீரர்களுக்கு ஷாக் கொடுத்தார். பந்து அனலை கக்குவது போல் இருந்ததால், பேட்ஸ்மன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது . முகமது சிராஜ் வீசிய பந்தில் அனாமுல் ஹக் எல்பி டபிள்யூ ஆனார்.

 உம்ரான் மாலிக் ஆயுதம்

உம்ரான் மாலிக் ஆயுதம்

இதனைத் தொடர்ந்து, வங்கதேச அணி கேப்டன் லிட்டன் தாஸ் ஸ்டம்பை முகமது சிராஜ் பதம் பார்த்தார். இதனைத் தொடர்ந்து உம்ரான் மாலிக் கைக்கு பந்து வந்தது. வங்கதேச வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் பார்த்திராத வேகத்தில் உம்ரான் மாலிக் பந்துவீசினார். மேலும், ஷகிபுல் ஹசனுக்கு உம்ரான் மாலிக் ஷாட் பால்களாக தொடர்ந்து வீசினார்.

 நடுங்கிய ஷகிபுல் ஹசன்

நடுங்கிய ஷகிபுல் ஹசன்

இதில் ஒரு பந்தால் ஷகிபுல் ஹசன் தலையிலும், உடலிலும் அடி வாங்கினார். இதனால் அணி மருத்துவர்கள் களத்துக்கு வந்து முதலுதவி அளிக்கும் நிலை ஏற்பட்டது இதனால் ஷகிபுல் ஹசன் உம்ரான் மாலிக் பந்தை எதிர்கொள்ளவே பயந்து, எதிர்முனையில் போய் ஒளிந்து கொண்டார்.

 151 கிமீ வேகப்பந்துவீச்சு

151 கிமீ வேகப்பந்துவீச்சு

இதே போன்று,வங்கதேச வீரர் ஷாண்டோ பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். முகமது சிராஜின் பந்துவீச்சில் தப்பித்த அவர், உம்ரான் மாலிக்கிடம் வந்து சிக்கி கொண்டார். 151 கிமீ வேகத்தில் உம்ரான் மாலிக் வீசிய பந்து, ஷாண்டோவின் ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் ஸ்டம்புகள் காற்றில் பறந்தது. இதனைத் தொடர்ந்து வங்கதேச வீரர்களின் உடலை குறிவைத்து உம்ரான் மாலிக் தொடர்ந்து வீசி வருகிறார்.

Story first published: Wednesday, December 7, 2022, 14:15 [IST]
Other articles published on Dec 7, 2022
English summary
Umran malik and Mohammed siraj fiery bowling spells stunned bangladesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X