வாக்கிங் சென்ற நடு ஸ்டம்ப்.. உம்ரான் மாலிக் ஆக்ரோஷ பவுலிங்.. தடுமாறிய இங்கிலாந்து அணி.. வீடியோ

டெர்பி: இங்கிலாந்து கவுண்டி அணியான டெர்பிஷிருடன் நடைபெற்ற டி20 பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வீரர் உம்ரான் மாலிக் அசத்தலாக பந்துவீசி, ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி வரும் 7ஆம் தேதி தொடங்குகிறது.

இதை கவனிதீர்களா?? இந்தியாவின் 3 ஸ்டார் வீரர்கள் படைக்கப்போகும் சாதனை.. இங்கி, டெஸ்டில் கலக்கல் தான்இதை கவனிதீர்களா?? இந்தியாவின் 3 ஸ்டார் வீரர்கள் படைக்கப்போகும் சாதனை.. இங்கி, டெஸ்டில் கலக்கல் தான்

இந்த தொடருக்காக தயாராகும் வகையில் இந்திய அணி 2 பயிற்சி டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. இதற்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திறமையை நிரூபித்தார்

திறமையை நிரூபித்தார்

ஏற்கனவே இந்திய டி20 அணி அயர்லாந்துடன் கடந்த வாரம் 2 டி20 போட்டியில் மோதி வெற்றி பெற்ற நிலையில், தற்போது அதே அணி தான் இந்த பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக அறிமுகமான உம்ரான் மாலிக், முதல் டி20 போட்டியில் ஒரு ஓவர் மட்டும் தான் வீசினார். ஆனால் 2வது டி20 போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தனது ஆக்ரோஷமான வேகத்தால் இந்தியாவுக்கு வெற்றி தேட தந்தார்.

ஆக்ரோஷ பந்துவீச்சு

ஆக்ரோஷ பந்துவீச்சு

இதன் மூலம் உம்ரான் மாலிக் தனது திறமையை அனைவருக்கும் உணர்த்தினார். இதன் மூலம் அவருக்கு இங்கிலாந்து டி20 தொடரிலும் இடம் கிடைத்தது. தற்போது டெர்பிஷிர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் உம்ரான் மாலிக், பங்கேற்றார். அயர்லாந்துக்கு எதிராக வெற்றியை தேடி தந்ததால், அவர் உத்வேகம் பல மடங்கு உயர்ந்து இருந்தது.

2 விக்கெட்டுகள்

2 விக்கெட்டுகள்

உம்ரான் மாலிக் வீசிய 4 ஓவர்களில் 3 பவுண்டரிகள் மட்டுமே சென்றன. சிக்சர்கள் ஏதும் செல்லவில்லை. பந்தின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் டெர்பிஷிர் வீரர்கள் திணறினர். இந்தப் போட்டியில் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் இரண்டிலுமே பேட்ஸ்மேன்களை க்ளீ ன் போல்ட் ஆக்கியுள்ளார் உம்ரான் மாலிக்.

சிதறிய ஸ்டம்புகள்

குறிப்பாக புருக் கெஸ்ட் பேட்டிங் செய்த போது, அவரது மிடில் ஸ்டம்ப் உம்ரான் மாலிக் பந்தில் எகிறி பறந்தது. மொத்தமாக 31 ரன்களை விட்டு கொடுத்த அவர் 2விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் இந்திய டி20 அணியில் தனது இடத்தை உம்ரான் மாலிக் மேலும் உறுதியாக பிடித்து கொண்டுள்ளார்,

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
umran malik splendid performance in warm up match vs Derbyshire வாக்கிங் சென்ற நடு ஸ்டம்ப்.. உம்ரான் மாலிக் ஆக்ரோஷ பவுலிங்.. தடுமாறிய இங்கிலாந்து அணி.. வீடியோ
Story first published: Saturday, July 2, 2022, 10:11 [IST]
Other articles published on Jul 2, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X