For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டுவென்டி 20 தொடருக்கான இந்திய அணியில் பும்ரா... ஷமி நீக்கம்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டுவென்டி 20 தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக முகம்மது ஷமி நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா போயுள்ள இந்திய அணி அங்கு தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளையும் தோல்வியுற்று தொடரைப் பறி கொடுத்து விட்டது இந்தியா. மிச்சம் உள்ள 2 போட்டிகளிலாவது வெல்ல முயற்சிப்பார்களா என்று தெரியவில்லை.

இந்த நிலையில், அடுத்து நடைபெறவுள்ள டுவென்டி 20 தொடருக்கான இந்திய அணியில் ஒரு மாற்றத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. மொத்தம் 3 டுவென்டி 20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

அனுராக் தாக்கூர் தகவல்

அனுராக் தாக்கூர் தகவல்

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராத் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய டுவென்டி 20 அணியில் ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளதாக அகில இந்திய தேர்வாளர் குழு தெரிவித்துள்ளது.

ஷமி நீக்கம்

ஷமி நீக்கம்

காயம் காரணமாக அணியிலிருந்து முகம்மது ஷமி சேர்க்கப்படவில்லை. இந்திய அணி 3 டுவென்டி போட்டிகளில் விளையாடவுள்ளது. ஜனவரி 26ம் தேதி முதல் போட்டி நடைபெறும்.

22ம் தேதி ஆஸி பயணம்

22ம் தேதி ஆஸி பயணம்

பும்ராவும், இதர டுவென்டி 20 வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஆசிஷ் நெஹ்ரா, சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் ஜனவரி 22ம் தேதி ஆஸ்திரேலியா செல்வார்கள் என்றார் அவர்.

47 போட்டிகள்

47 போட்டிகள்

22 வயதான பும்ரா இதுவரை 18 முதல் தரப் போட்டிகள், 20 லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடியுள்ளார். 47 டுவென்டி போட்டிகளிலும் அவர் ஆடியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் அவர் வலது கை பந்து வேகப் பந்து வீச்சாளர் ஆவார்.

Story first published: Monday, January 18, 2016, 18:32 [IST]
Other articles published on Jan 18, 2016
English summary
Uncapped Jasprit Bumrah has replaced Mohammad Shami in India's T20I squad for Australia series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X