For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 பந்தில் 3 பேர் அவுட்.. சபாஷ் 'தம்பீ'....!

அகமதபாத்: அடடா என்னா மேட்ச்..என்னா மேட்ச்.. இப்படி ஒரு ஹாட்ரிக்கை சரித்திரம் இதற்கு முன்பு ஒரே ஒரு முறைதான் கண்டுள்ளது. 2வது முறையாக அந்த சாகசத்தை பிரவீன் தாம்பே நேற்று அகமதாபாத்தில் நிகழ்த்தினார்.

ராஜஸ்தான் ராயலஸ் அணியின் அபாரமான பந்து வீச்சாளராக ஃபுல் பார்மில் கலக்கி வரும் தாம்பே, நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போதுதான் இந்த அரசிய சாதனையை நிகழ்த்தினர்.

அடுத்ததடுத்து 2 பந்துகளில் அவர் 3 பேரின் விக்கெட்களைச் சாய்த்து சாதனைச் சரித்திரத்தில் தனது பெயரையும் பதிவு செய்து கொண்டார்.

அரிதிலும் அரிது...

அரிதிலும் அரிது...

இப்படிப்பட்ட சாதனை இதற்கு முன்பு டுவென்டி 20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒருமுறைதான் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதைச் செய்தவர் இலங்கையைச் சேர்ந்த இசுரு உதனா. இவர் 2010ல் போர்ட் எலிசபெத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 தொடரின்போது வயாம்பா அணிக்காக ஆடி, சென்ட்ரல் டிஸ்டிர்க்ட் அணியின் 3 விக்கெட்களை 2 பந்துகளில் சாய்த்தார்.

இப்போது தாம்பே

இப்போது தாம்பே

இப்போது இதேபோன்றதொரு சாதனையை பிரவீன் தாம்பே நிகழ்த்தியுள்ளார் அகமதாபாத்தில்.

கொல்கத்தாவை சீர்குலைத்த ஹாட்ரிக்

கொல்கத்தாவை சீர்குலைத்த ஹாட்ரிக்

தாம்பேவின் இந்த அரிய வகை ஹாட்ரிக் விக்கெட் வீ்ழ்த்தலால், வெற்றியை நோக்கி அணிவகுத்துக் கொண்டிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அப்படியே ஸ்தம்பித்துப் போய் தோல்வியில் விழுந்து விட்டது.

16வது ஓவரில்

16வது ஓவரில்

ஆட்டத்தின் 16வது ஓவரில் இந்த சாதனையைப் படைத்தார் தாம்பே.

42 வயசு இளம் புயல்

42 வயசு இளம் புயல்

தாம்பேவுக்கு வயது 42 ஆகிறது. இதுவரை இந்திய அணிக்காக ஒருமுறை கூட இவரைத் தேர்வு செய்தது கிடையாது நமது கிரிக்கெட் பண்டிதர்கள். இந்த வெறிதான், கோபம்தான் தற்போதைய ஐபிஎல் தொடரில் தாம்பேவை முழு வேகத்தில் வெறியுடன் பந்து வீச வைத்துள்ளது.

முதல் ஹாட்ரிக்...

முதல் ஹாட்ரிக்...

இதுதான் தாம்பேவின் முதல் ஹாட்ரிக்கும் கூட. தனது 2 பந்துகளில் அவர் மணீஷ் பாண்டே, யூசுப் பதான் மற்றும் ரியான்டென் டஸ்சேட் ஆகிய மூவரை வீழ்த்தினார்.

30 பந்துகளில் 49 தேவை

30 பந்துகளில் 49 தேவை

தாம்பே 16வது ஓவரை வீச வந்தபோது கொல்கத்தா அணி 30 பந்துகளில் 49 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற சுலபமான நிலையில்தான் இருந்தது. ஆனால் தாம்பே அதில் மண்ணைப் போட்டு விட்டார்.

முதல் பந்து வைடு.. பாண்டே ஸ்டம்ப்ட்... பதான் கேட்ச்

முதல் பந்து வைடு.. பாண்டே ஸ்டம்ப்ட்... பதான் கேட்ச்

தாம்பே வீசிய முதல் பந்து வைடு ஆகிப் போனது. அப்போது மணீஷ் பாண்டே கிரீஸை விட்டு வெளியே வந்து விட்டார். இதனால் அவரை சஞ்சு சாம்சன் ஸ்டம்ப்ட் செய்து விட்டார். அவர் அவுட்... அதேசமயம் யூசுப் பதான் கேட்ச் ஆனார்.. 2வது விக்கெட்டும் காலி.

2வது பந்தில் டென் எல்பிடபிள்யூ...

2வது பந்தில் டென் எல்பிடபிள்யூ...

அடுத்த பந்தை தாம்பே வீசியபோது அதை டென் டஸ்சேட் அடித்தார். ஆனால் அவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.. புதிய வரலாறு படைத்தார் தாம்பே.

அடுத்த 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே

அடுத்த 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே

தொடர்ந்து பந்து வீசிய தாம்பே அடுத்த நான்கு பந்துகளில் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

இதுவரை 12 விக்கெட்கள்.. நம்பர் ஒன்...

இதுவரை 12 விக்கெட்கள்.. நம்பர் ஒன்...

இதுவரை 12 விக்கெட்களை வீழ்த்தி, அதிக விக்கெட்களை வீ்ழ்த்திய பவுலராக பர்ப்பிள் தொப்பியை கையகப்படுத்தியுள்ளார் தாம்பே.

Story first published: Tuesday, May 6, 2014, 11:06 [IST]
Other articles published on May 6, 2014
English summary
Rajasthan Royals' legspinner Pravin Tambe achieved a rare distinction of taking a hat-trick in two balls yesterday (May 5) at the Sardar Patel Stadium here. Tambe took a hat-trick against Kolkata Knight Riders here on Monday with two legal deliveries after the first wicket came through a wide ball.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X