For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீ அவனை அடி.. அவனை நீ அடி.. குத்துச் சண்டையாக மாறிய கிரிக்கெட் போட்டி!

பெர்முடா: பெர்முடா தீவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி பெரும் வன்முறையாக மாறியது. இரு அணி வீரர்கள் சரமாரியாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் ஒருவர் காயமடைந்தார். இந்த கலாட்டாவைத் தொடர்ந்து ஒரு வீரருக்கு ஆயுள் கால தடை விதிக்கப்பட்டது.

பிரிட்டனுக்கு உட்பட்ட தீவுகளில் ஒன்று பெர்முடா. இங்கு சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிக்கு கிளீவ்லாந்து கவுன்டி கிரிக்கெட் கிளப் அணியும், வில்லோ கட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் தகுதி பெற்றன.

இந்தப் போட்டியின்போது இரு அணி வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் பேட்டுகளாலும், கைகளாலும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மைதானமே போர்க்களமாக மாறிப் போனது.

செப்டம்பர் 12ம் தேதி

செப்டம்பர் 12ம் தேதி

செப்டம்பர் 12ம் தேதி இந்த மோதல் நடந்தது. இப்போட்டியில் மிகவும் மோசமாக நடந்து கொண்டு வீரர்களைத் தாக்கியதாக 36 வயது விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன் என்பவருக்கு ஆயுள் கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதலில் வாய் வார்த்தை

முதலில் வாய் வார்த்தை

போட்டியின்போது ஜேசன் ஆண்டர்சனுக்கும், எதிர்த் தரப்பு வீரர் ஜார்ஜ் ஓ பிரையனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பிரையன் பேட் செய்து கொண்டிருந்தபோது ஜேசன் அவரிடம் ஏதோ கோபமாக பேசியபடி வந்தார்.

தலையில் ஒரே போடு

தலையில் ஒரே போடு

பேசிக் கொண்டிருக்கும்போதே ஜேசன், பிரையன் மீது கையை வைத்து விட்டார். அவரது தலையில் பின்னால் இருந்தபடிபலமாக குத்தினார். பதிலுக்கு பிரையனும் அடிக்க.. அவ்வளவுதான் பரபரப்பாகி விட்டது.

சரமாரி அடி

சரமாரி அடி

பிரையன் சற்று அமைதி காத்தார். ஆனால் ஜேசன் விடவில்லை. வேகமாக ஓடி வந்து பேட்டால் தாக்கினார். பிரையனை கீழே தள்ளி காலால் உதைத்தார். பதிலுக்கு பிரையனும் அடித்தார். ஆனால் ஜேசனின் பலத்திற்கு முன்னால் பிரையனால் பதில் தாக்குதல் நடத்த முடியவில்லை.

போலீஸ் போலீஸ்

போலீஸ் போலீஸ்

நிலைமை மோசமாகவே கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஓடி வந்தனர். சில வீரர்களும் விலக்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு அவர்கள் வந்து விலக்கி விட்டனர்.

ஆண்டர்சன் வெளியேற்றம்

ஆண்டர்சன் வெளியேற்றம்

இந்த மோதலைத் தொடர்ந்து ஆண்டர்சன் வெளியேற்றப்பட்டார். பின்னர் ஆட்டம் தொடர்ந்தது. அதில், கிளீவ்லாந்து அணி வெற்றி பெற்றது.

வாழ்நாள் தடை

போட்டி முடிவில் மோதலில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. மோசமாக நடந்து கொண்டதற்காக ஆண்டர்சனுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. பிரையனுக்கும் 6 ஒரு நாள் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது.

Story first published: Tuesday, September 22, 2015, 12:58 [IST]
Other articles published on Sep 22, 2015
English summary
A cricket match turned into a wrestling-kickboxing contest with players fighting on the field with bat being swung and one of the cricketers knocked down to the ground. The end result - life ban for one of them.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X