இந்தியாவில் தேடப்படும் நபர்.. இங்கிலாந்து பிரதமருடன் பங்கேற்பு.. விஜய் மல்லையா, கெயில் சந்திப்பு

லண்டன்: நாட்டை விட்டு வெளியேறி, இங்கிலாந்தில் தலைமறைவாகியுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையாவை, கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் சந்தித்து பேசினார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், இங்கிலாந்துகு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்த கிறிஸ் கெயில், அவருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார்.

கடைசி பந்தில் 5 ரன்கள்.. திக்..திக்.. நொடிகள்.. 30 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்த இலங்கை அணிகடைசி பந்தில் 5 ரன்கள்.. திக்..திக்.. நொடிகள்.. 30 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்த இலங்கை அணி

சுதந்திர பறவை

சுதந்திர பறவை

இதன் பிறகு, இந்திய வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி, அதனை திருப்பி செலுத்தாமல் பல்லாயிர கோடி கணக்கில் மோசடி செய்த விஜய் மல்லையா தற்போது நாட்டை விட்டு வெளியேறி, இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியை தழுவியது. அதன் பிறகு அவர் இங்கிலாந்தில் சுதந்திர பறவையாக திகழ்ந்து வருகிறார்.

பார்ட்டி நண்பர்கள்

பார்ட்டி நண்பர்கள்

விஜய் மல்லையாவுக்கும், கிறிஸ் கெயிலுக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும், அணியின் உரிமையாளர் என்ற நிலையையும் தாண்டி , இருவருக்கு இடையே அப்படி ஒரு நட்பு திகழ்ந்து இருந்தது. விஜய் மல்லைய்யாவின் கோவா பங்களாவில் தான் கிறிஸ் கெயில் தங்குவார். இருவரும் சேர்ந்து பார்ட்டி செய்தால் அவ்வளவு தான் அட்டகாசம் தாங்காது.

மீண்டும் சந்திப்பு

மீண்டும் சந்திப்பு

இந்த நிலையில், இங்கிலாந்து சென்றுள்ள கிறிஸ் கெயில், விஜய் மல்லையாவை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த சந்திப்பின் போது இருவரும் இந்தியாவின் ஐபிஎல் நாட்களில் அடித்த லூட்டிகள் குறித்து பேசினர். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள விஜய் மல்லையா, தன்னுடைய நல்ல நண்பன் கிறிஸ் கெயிலை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

விஜய் மல்லைய்யாவுடன் சந்திப்பு

விஜய் மல்லைய்யாவுடன் சந்திப்பு

கிறிஸ் கெயிலை யுனிவர்சல் பாஸ் என்று பாராட்டிய விஜய் மல்லைய்யா, அவரை ஆர்சிபி அணிக்காக எடுத்த நாள் முதல் இருவரின் நட்பும் இன்று வரை தொடருவதாக கூறினார். இத்னிடையே, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொண்ட அதே நிகழ்ச்சியில் தான் விஜய் மல்லைய்யாவும் பங்கேற்றுள்ளது புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தேடப்படும் மோசடி நபர் , இங்கிலாந்து பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Vijay Mallya meet up with cricketer chris gayle இந்தியாவில் தேடப்படும் நபர்.. இங்கிலாந்து பிரதமருடன் பங்கேற்பு.. விஜய் மல்லையா, கெயில் சந்திப்பு
Story first published: Wednesday, June 22, 2022, 13:04 [IST]
Other articles published on Jun 22, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X