ரைட்ல போடாதடா.. அவன் சொன்னா கேக்க மாட்றான்.. விஜய் சங்கர், தினேஷின் உரையாடல், குழம்பிய ரோஹித்!

Posted By:

கொழும்பு: வங்கதேசத்துக்கு எதிரான டி-20 போட்டியில் தினேஷ் கார்த்திக்கும், விஜய் சங்கரும் பேசிய தமிழ் உரையாடல் வைரல் ஆகி இருக்கிறது.

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதும் டி-20 போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா சிறப்பாக பந்து வீசி இருக்கிறது.

இந்த போட்டியில் 18.4 ஓவரிலேயே இந்தியா 140 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. இதில் விஜய் சங்கர் 2 விக்கெட் எடுத்தார்.

மூன்று பேர்

மூன்று பேர்

இந்திய அணியில் தற்போது மூன்று தமிழ் வீரர்கள் இருக்கிறார்கள். கீப்பிங் பேட்டிங் செய்ய தினேஷ் கார்த்திக், பவுலிங் செய்ய வாஷிங்டன் சுந்தர், ஆல்ரவுண்டருக்கு விஜய் சங்கர் என மூன்று வீரர்கள் இருக்கிறார்கள். மூன்று பேருமே நன்றாக விளையாடி வருகிறார்கள்.

மாஸ்

மாஸ்

இதில் விஜய் சங்கர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்று அவர் 5 விக்கெட் எடுத்து இருக்க வேண்டும். ஆனால் மூன்று கேட்சுக்கு இவர் பவுலிங்கில் தவற விடப்பட்டது. இதில் 2 விக்கெட் மட்டுமே எடுத்தார்.

இந்திய அணியின் எதிர்காலம்

இவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். இவர் பவுலிங் மட்டுமில்லாமல் பீல்டிங்கும் மிகவும் சிறப்பாக செய்கிறார். சிறந்த ஆல்ரவுட்ருக்கான எல்லா தகுதியும் இவரிடம் காணப்படுகிறது.

தமிழில் பேசினார்

தமிழில் பேசினார்

இந்த போட்டியில் வாஷிங்க்டன் சுந்தர் பவுலிங் போட்ட போது விஜய் சங்கர் ''டேய் ரைட்ல போடாதடா'' என்று கூறினார். அதற்கு கீப்பிங் செய்த தினேஷ் கார்த்திக் ''அவன் சொன்னா கேட்க மாட்டேங்குறான்டா'' என்றார். அதன்பின் வாஷிங்டன் லெப்டில் பந்து வீசினார்.

ரோஹித்

ரோஹித்

அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று ரோஹித் சர்மா பார்த்துக் கொண்டு இருந்தார். ஆனால் அவர்களை பேசியதை மும்பை கேப்டனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் குழம்பி போய் பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஏற்கனவே நடந்தது

ஏற்கனவே தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுலும் , முரளி விஜயும் தமிழில் பேசிக் கொண்டார்கள். அந்த வீடியோ மிகவும் வைரல் ஆனது. பல வட இந்தியர்கள் இதை பார்த்து பொங்கி இருந்தார்கள்.

Story first published: Friday, March 9, 2018, 16:06 [IST]
Other articles published on Mar 9, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற