சிவன், நெற்றிக் கண், சாமுராய்.. கோஹ்லியின் வித்தியாசமான டாட்டூ செண்டிமெண்ட்!

Posted By:
பெற்றோர்கள் பெயரை டாட்டூகளாக வரைந்த விராட் கோஹ்லி- வீடியோ

மும்பை: விராட் கோஹ்லி மும்பையில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் பச்சை குத்தும் படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. அவர் கைகளில் பச்சை குத்தும் புகைப்படம் ஆகும் இது.

அவர் தற்போது இந்திய அணி விளையாடும் முத்தரப்பு போட்டியில் இருந்து ஓய்வில் இருக்கிறார். அவருக்கும் டோணிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இனி இவர் ஐபிஎல் போட்டியில் நேரடியாக விளையாடுவார். இதற்காகவே இப்படி பச்சை குத்தி இருக்கிறார் என்று கூறப்பட்டு இருக்கிறது.

சிவன் பக்தர்

இவர் சிவன் படத்தைதான் அதிகம் பச்சை குத்தி இருக்கிறார். கைகளில் மூன்று இடங்களில் சிவன் படத்தை பச்சை குத்தியுள்ளார். கையில் இன்னொரு இடத்தில் கைலாச படத்தை பச்சை குத்தியுள்ளார். மேலும் சிவனின் நெற்றிக்கண் படத்தையும் பச்சை குத்தியுள்ளார்.

கிரிக்கெட்

இவர் தனது கையின் மேற்பகுதியில் தன்னுடையாய் ஜெர்சி எண்ணை சிறிதாக பச்சை குத்தி இருக்கிறார். அதேபோல் பெரிய சாமுராய் படம் ஒன்றையும் பச்சை குத்தியுள்ளார். போராட்ட குணம் காரணமாக அவர் இப்படி பச்சை குத்தியுள்ளார்.

பெற்றோர்

அதேபோல் இவர் தனது அம்மா அப்பா பெயரையும் பச்சை குத்தி இருக்கிறார். ஹிந்தியில் அவர்களை பெயரை அருகருகே பச்சை குத்தியுள்ளார். தனது இடது கையில் இப்படி பச்சை குத்தி இருக்கிறார்.

அர்த்தம்

அர்த்தம்

இவர் தனது கைகளில்தான் அதிகமாக பச்சை குத்தி இருக்கிறார். இந்த படங்கள் எல்லாவற்றிற்கும் நிறைய அர்த்தம் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். தன்னுடைய வாழ்க்கை முறையையும், தான் எப்படி இருப்பேன் என்பதையும் இது காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 6, 2018, 15:40 [IST]
Other articles published on Mar 6, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற