For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“தப்பு பண்ணிட்டீங்களே சார்”.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி பறிகொடுத்த வாய்ப்பு.. திரும்ப கிடைக்குமா?

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் விராட் கோலி மிகப்பெரிய வாய்ப்பை இழந்துள்ளார்.

Recommended Video

Rahul Dravid இடத்திற்கு குறி வைக்கும் Ricky Ponting *Cricket

மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை இரவு குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

“இதெல்லாம் அநியாயம் சார்..” வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சஞ்சு சாம்சன் ஒதுக்கப்பட்டது ஏன்?? உண்மை காரணம்! “இதெல்லாம் அநியாயம் சார்..” வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சஞ்சு சாம்சன் ஒதுக்கப்பட்டது ஏன்?? உண்மை காரணம்!

கோலி ஓய்வு

கோலி ஓய்வு

இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலிக்கு முற்றிலுமாக ஓய்வு தரப்பட்டது. இங்கிலாந்து தொடரில் சொதப்பிய கோலி, ஒருமாத ஓய்வுக்கு பின்னர் ஆசியக்கோப்பை தொடரில் கம்பேக் தருவார் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் அந்த திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டன.

 பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

இந்திய அணி ஆசியக்கோப்பைக்கு முன்னதாக ஆகஸ்ட் 18 - 22ம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடராக ஜிம்பாவேவுடன் மோதுகிறது. இந்த தொடரில் இந்தியாவின் இளம்படை பங்கேற்கும் சூழலில் கோலியும் அதில் கலந்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறிய அணிகளுடன் விளையாடி ஸ்கோர் அடித்தால் கூட கோலிக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் என திட்டத்தில் இதனை செய்துள்ளனர்.

கோலியின் தவறு

கோலியின் தவறு

இந்நிலையில் இந்த விஷயத்தில் தான் கோலி தவறு செய்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி கம்பேக் தர அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் அவருக்கு பேட்டிங் செய்ய மிகவும் பிடித்தமான அணி வெஸ்ட் இண்டீஸ் ஆகும். இதற்கு சான்று, அந்த அணியுடனான கோலியின் ரெக்கார்ட்கள் தான்.

தரமான ரெக்கார்ட்

தரமான ரெக்கார்ட்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் விராட் கோலி தான். அந்த அணியுடன் இதுவரை 42 ஒருநாள் போட்டிகளில் கோலி விளையாடியுள்ளார். அதில் 2,261 ரன்களை சேர்த்துள்ளார். இதில் 9 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் அடங்கும். கோலியின் சராசரி 66.50 ரன்கள் ஆகும். இப்படிப்பட்ட அணியுடன் கோலி, தாமாக ஓய்வு கேட்டுவிட்டு விடுமுறையில் இருந்து வருகிறார் என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Thursday, July 21, 2022, 15:03 [IST]
Other articles published on Jul 21, 2022
English summary
Virat kohli in India vs west indies series ( இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் ) வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இருந்து ஓய்வு எடுத்து விராட் கோலி பெரும் தவறை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X