பசங்க எல்லாரும் தீயா வேலை செஞ்சாங்க.. எங்ககிட்டேவா.. கொக்கரிக்கும் கோஹ்லி

Posted By:

டெல்லி: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று ஆரம்பித்தது. நேற்று டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டி நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு இந்தியா 202 ரன்கள் குவித்தது.203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது. இதன் காரணமாக 20 ஓவருக்கு 149 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தோற்றது.

இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டம் குறித்து பெருமையாக பேட்டி அளித்து இருக்கிறார். அனைவரும் மிகவும் சிறப்பாக விளையாடியதாக கூறியுள்ளார்.

 நியூசிலாந்து இந்தியா மோதும் முதல் டி-20

நியூசிலாந்து இந்தியா மோதும் முதல் டி-20

இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் இருந்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. ரோஹித், தவான், கோஹ்லி அதிரடியால் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 149 ரன்களுக்கு தோற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டி-20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. தவான் மேன் ஆப் தி மேட்ச் பட்டம் பெற்றார்.

 தவான் தன்னை மாற்றிக் கொண்டார்

தவான் தன்னை மாற்றிக் கொண்டார்

இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் தவான் 80 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அவருக்கு மேன் ஆப் தி மேட்ச் பட்டம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தவான் குறித்து கோஹ்லி பேட்டியளித்து இருக்கிறார் அதில் "தவான் சிறந்த ஒருநாள் வீரர். அவரை தன்னை பலகாலமாக டி-20 போட்டிக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முயற்சித்து வந்தார். ஒருநாள் போட்டியில் விளையாடுவதை போலவே டி-20யிலும் விளையாட முயற்சி எடுத்தார். இப்போது முழுதாக டி-20 அணிக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றியிருக்கிறார். மேலும் ரோஹித் அனைத்து பந்துகளையும் பறக்கடித்துவிட்டார்'' என்று கூறினார்.

 நெருப்பு...தொட முடியுமா

நெருப்பு...தொட முடியுமா

அதேபோல் கோஹ்லி இந்திய அணியின் டி-20 பிளெயிங் லெவன் குறித்தும் பேசியிருக்கிறார். அதில் டி-20 போட்டிகளுக்காக இந்திய அணியில் உருவாகி இருக்கும் மாற்றம் குறித்து பேசினார். அதன்படி "எப்போதும் டி-20 போட்டிகளில் அடிக்கடி விக்கெட் எடுக்கும் வகையில் ஆட்கள் இருக்க வேண்டும். அதனால்தான் நேற்று 6 பவுலர்களுடன் இறங்கினோம். மேலும் 6 வது இடத்தில் பாண்டியாவும், 7வது இடத்தில் அக்சர் பட்டேலும் இருப்பது இந்திய அணிக்கு நல்ல துணையாக இருக்கிறது'' என்று கூறினார்.

 நெஹ்ரா குறித்து கோஹ்லி

நெஹ்ரா குறித்து கோஹ்லி

மேலும் அவர் பேசும் போது நேற்றைய போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற நெஹ்ரா குறித்து குறிப்பிட்டார். அதில் ''இந்திய அணி கண்டிப்பாக நெஹ்ராவை மிஸ் செய்யும்'' என்று கூறினார். மேலும் நெஹ்ராவும் இவரும் இருக்கும் பழைய வைரல் புகைப்படம் குறித்தும் பேசினார். அப்போது ''அந்த புகைபபடம் என்னுடைய 13 வயதில் எடுக்கப்பட்டது. அப்போது நான் எங்கள் பள்ளி அணியில் இடம்பெறுவதற்காக மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தேன். அவர் எனக்கு பரிசு அளித்தார் அப்போது. 19 வருடங்கள் ஒருவர் வேகப்பந்து வீச்சாளராக இருப்பது பெரிய சாதனை. நெஹ்ரா ரியலி கிரேட்'' என்றார்.

Story first published: Thursday, November 2, 2017, 13:02 [IST]
Other articles published on Nov 2, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற