புதிய ஹேர்ஸ்டைலுடன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்த விராட் கோலி

மும்பை : புத்தாண்டு கொண்டாட்டத்தை தனது மனைவி மற்றும் பாலிவுட் பிரபலங்களுடன் சுவிட்சர்லாந்தில் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய விராட் கோலி புத்தாண்டில் புதிய ஹேர்ஸ்டைலுடன் தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

விராட் கோலியின் புதிய ஹேர்ஸ்டைலுக்கு அவரது ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளை அளித்துவரும் நிலையில், பாலிவுட் நடிகர் அனில் கபூரும் கமெண்ட் செய்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியினருடன் இந்திய அணியினர் வரும் ஞாயிற்றுக்கிழமை கவுஹாத்தியில் முதல் சர்வதேச டி20 போட்டியை விளையாட உள்ளனர்.

2019ன் இறுதி வெற்றி

2019ன் இறுதி வெற்றி

சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை 2க்கு 1 என்ற கணக்கில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் கடந்த ஆண்டின் இறுதியில் வெற்றிக் கொண்டனர்.

மனைவி, பாலிவுட் நடிகர்களுடன் கொண்டாட்டம்

மனைவி, பாலிவுட் நடிகர்களுடன் கொண்டாட்டம்

இதையடுத்து கிடைத்த இடைவெளியில் தனது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் சுவிட்சர்லாந்தில் தனது புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடினார் விராட் கோலி. இவர்களுடன் பாலிவுட் பிரபலங்கள் கரீனா கபூர், சாயிப் அலிகான் மற்றும் வருண் தவானும் இணைந்திருந்தனர்.

புதிய ஹேர்ஸ்டைல்

புதிய ஹேர்ஸ்டைல்

இந்தக் கொண்டாட்டங்களை அடுத்து இந்தியா திரும்பிய கோலி, இலங்கை தொடருக்காக தயாராகி வருகிறார். இதனிடையே இலங்கை அணியை புத்தாண்டில் புதிய வேகத்துடன் மட்டுமின்றி புதிய ஹேர்ஸ்டைலுடனும் சந்திக்க திட்டமிட்டார்.

புகைப்படம் வெளியிட்ட ஹேர் ஸ்டைலிஸ்ட்

புகைப்படம் வெளியிட்ட ஹேர் ஸ்டைலிஸ்ட்

புதிய ஹேர்கட் குறித்த புகைப்படத்தை விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், அவரது ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹகீமும் சில புகைப்படங்களை வெளியிட்டு, புதிய ஆண்டு, புதிய கட், தி கிங் என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.

"பயங்கரமா இருக்கு"

இந்த ஹேர்ஸ்டைலுக்கு பலரும் பல்வேறு கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் அளித்துவரும் நிலையில் பாலிவுட் நடிகர் அனில் கபூர், இந்த ஹேர்ஸ்டைல் பயங்கரமாக இருப்பதாக கமெண்ட் அளித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Captain Virat Kohli's new Haircut - Anil kapoor comments
Story first published: Friday, January 3, 2020, 14:36 [IST]
Other articles published on Jan 3, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X