For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு ஐபிஎல் சீசனில் இரு செஞ்சுரி, 8 போட்டிகளிலேயே 500 ரன்.. 'ரன் மெஷின்' கோஹ்லி சாதனை

By Veera Kumar

பெங்களூர்: ஐபிஎல் போட்டியில் நேற்று புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோஹ்லி அதிரடி சதம் விளாசினார். ஒரு ஐபிஎல் தொடரில் இருமுறை சதம் அடித்த முதல் இந்திய வீரர் விராட் கோஹ்லிதான்.

புனே அணிக்கு எதிராக பெங்களூரில் நேற்று நடைபெற்ற நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கோஹ்லி பீல்டிங்கை தேர்வு செய்தார். புனே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்று, உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தியது.

வெற்றி

வெற்றி

தொடக்க வீரராக இறங்கிய கோஹ்லி கடைசி வரை அவுட் ஆகாமல் 108 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார். மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 38 ரன்களும், வாட்ஸன் 36 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

சாதனை

சாதனை

2011ம் ஆண்டு கிறிஸ் கெயில் ஒரே சீசனில் இருமுறை செஞ்சுரி அடித்தார். அதன்பிறகு கோஹ்லி இப்போது இரண்டாவது செஞ்சுரியை விளாசியுள்ளார்.

500 ரன்கள்

500 ரன்கள்

நடப்பு சீசனில் 8 போட்டிகளிலேயே, கோஹ்லி 500 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 தொடர் ஒன்றில் 500 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார்.

ஆயிரம் ரன்

ஆயிரம் ரன்

இவ்வாண்டில் கோஹ்லி மொத்தம் 20 டி20 இன்னிங்சுகளில் ஆடி 1166 ரன்களை குவித்துள்ளார். இதில் 2 செஞ்சுரிகள் மற்றும் 11 அரை சதங்கள் உள்ளன.

சேஸிங் கிங்

சேஸிங் கிங்

கோஹ்லி நடப்பாண்டில் சேஸிங் செய்யும் போட்டிகளில் வைத்திருக்கும் பேட்டிங் சராசரி எத்தனை தெரியுமா. 220. இது மிகப்பெரிய அவரேஜ் ஆகும்.

Story first published: Sunday, May 8, 2016, 11:29 [IST]
Other articles published on May 8, 2016
English summary
Virat Kohli second ton of the tournament, off 56 balls, to heal Royal Challengers Bangalore’s bowling wounds.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X