For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தன்னுடைய இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட கோலி... பும்ராதான் இறங்கிட்டாரு

டெல்லி : ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தன்னுடைய இரண்டாவது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார்.

Recommended Video

Virat Kohli completes 12 years in International Cricket

ஆனால் பௌலர்கள் வரிசையில் ஜஸ்பிரீத் பும்ரா ஒருஇடம் கீழே இறங்கி 9வது இடத்தை பிடித்துள்ளார்.

சத்தீஸ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே முறையே 8வது மற்றும் 10வது இடத்தில் நிலை கொண்டுள்ளனர்.

 பஸ் டிரைவரான தல தோனி.. அப்டியே ஷாக் ஆகிட்டோம்.. சக வீரர்கள் பிரமிப்பு பஸ் டிரைவரான தல தோனி.. அப்டியே ஷாக் ஆகிட்டோம்.. சக வீரர்கள் பிரமிப்பு

தொடர்ந்து 2வது இடத்தில் கோலி

தொடர்ந்து 2வது இடத்தில் கோலி

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கேப்டன் விராட் கோலி தன்னுடைய இரண்டாவது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை தக்க வைத்துள்ள நிலையில், பாகிஸ்தானின் பாபர் அசாம் மீண்டும் 5வது இடத்தை பிடித்துள்ளார்.

9வது இடத்தில் பும்ரா

9வது இடத்தில் பும்ரா

சர்வதேச அளவில் ஆடப்படும் போட்டிகள் உள்ளிட்டவற்றை கொண்டு அவ்வப்போது ஐசிசியின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பௌலர்கள் பட்டியலில் 8வது இடத்தில் இருந்த ஜஸ்பிரீத் பும்ரா ஒரு இடம் கீழிறங்கி 9வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆன்டர்சன் 2 இடங்களில் முன்னேற்றம்

ஆன்டர்சன் 2 இடங்களில் முன்னேற்றம்

இங்கிலாந்தின் இரட்டை பௌலர்கள் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஆகியோர் சௌதாம்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி தங்களது இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளனர். பிராட் ஒரு இடம் முன்னேறி 2வது இடத்திலும் ஆன்டர்சன் 2 இடங்கள் முன்னேறி 14வது இடத்திலும் உள்ளனர்.

10 இடங்களில் புஜாரா, ரஹானே

10 இடங்களில் புஜாரா, ரஹானே

இந்நிலையில் சத்தீஸ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய இந்திய பேட்ஸ்மேன்கள் முறையே 8வது மற்றும் 10வது இடத்தில் நிலைகொண்டுள்ளனர். இதேபோல ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் தன்னுடைய 3வது இடத்தில் நிலையாக உள்ளார். சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் உள்ளன.

Story first published: Tuesday, August 18, 2020, 19:54 [IST]
Other articles published on Aug 18, 2020
English summary
In the World Test Championship points table, India continued to lead with 360 points
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X