For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... டிவீட் போட ஜரூரா வந்துட்டேன்னு சொல்லு...

மும்பை: தன்னுடைய டிவிட்டர் வாழ்த்துக்களால் ரசிகர்களை திணறடித்துவரும் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து அணியுடனான தோல்வியை அடுத்து சிறிது நாட்கள் டிவிட்களை குறைத்துக் கொண்டிருந்தார்.

Recommended Video

இந்திய மகளிர் அணிக்கு கோலி அட்வைஸ்!

இந்நிலையில், தற்போது வசந்த காலத்தின் திருவிழாவான ஹோலிக்கான வாழ்த்துக்களுடன் அவர் மீண்டும் களமிறங்கியுள்ளார். இந்த ஹோலி, அனைவருக்கும் தங்களது வாழ்க்கையின் அதிகமான வண்ணங்களை கொடுக்கட்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

Virat Kohli Wishes his Fans a Joyful and Safe Holi

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வரும் 12ம் தேதி தர்மசாலாவில் துவங்கவுள்ள சர்வதேச ஒருநாள் தொடரின் முதல்போட்டியில் விளையாடவுள்ள கோலி, தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற சர்வதேச டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் மோதிய இந்திய அணி தற்போது, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி தர்மசாலாவிலும், இரண்டாவது போட்டி லக்னோவிலும் 3வது மற்றும் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

நியூசிலாந்திற்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடாத கேப்டன் விராட் கோலி, பல்வேறு சர்ச்சைகள் மற்றும் கண்டனங்களுக்கு ஆளானார். அவரது கேப்டன்ஷிப்பே கேள்விக்குள்ளானது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து இருக்கும் விராட் கோலி, டிவீட் போடுவதை விட்டுவிட்டு, போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிலர் தெரிவித்திருந்தனர்.

ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி.. கிரிக்கெட் ஸ்டார்களும் வாழ்த்துறாங்கப்பா!ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி.. கிரிக்கெட் ஸ்டார்களும் வாழ்த்துறாங்கப்பா!

இதையடுத்து கடந்த சில தினங்களாக டிவீட் போடுவதை தவிர்த்துவந்த விராட் கோலி, உலக கோப்பையையொட்டி மகளிர் அணிக்கு வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் தன்னுடைய டிவீட்களை அவர் துவக்கியுள்ளார். முதலாவதாக, நாட்டு மக்களுக்கு தன்னுடைய ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த வண்ணத் திருவிழா, நாட்டு மக்களின் வாழ்க்கையில் அதிகமான வண்ணங்களை நிரப்பட்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் நாளை மறுதினம் முதல் ஆடவுள்ள விராட் கோலி, வீரர்களுக்கு ஒவ்வொரு தொடருக்கும் இடையில் போதிய ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அவர் நியூசிலாந்து தொடரை தொடர்ந்து சில தினங்களிலேயே அடுத்ததாக தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரிலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளிலும் ஆடவுள்ளார்.

Story first published: Tuesday, March 10, 2020, 13:03 [IST]
Other articles published on Mar 10, 2020
English summary
Virat Kohli Wishes his Fans on the occasion of Holi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X