For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சவுரவ் கங்குலி.. சட்டையைக் கழற்றிப் போட்டு சல்மான் கானாக மாறிய அந்த தருணம்!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான நேட்வெஸ்ட் கோப்பையை இந்தியா வென்ற தினத்தை நினைவு கூர்ந்துள்ள முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக், இந்தியா வெற்றி பெற்றபோது சட்டையைக் கழற்றி ஆவேசமாக கூச்சலிட்ட அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலியை சல்மான் கான் என்று கூறி டிவிட் போட்டுள்ளார்.

2002ம் ஆண்டு நடந்த கதை இது. அப்போது ஜூலை 13ம் தேதியன்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நேட்வெஸ்ட் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றியை நோக்கி தடுமாறிக் கொண்டிருந்த நேரம். லார்ட்ஸ் மைதானத்தி்ல் போட்டி நடந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 325 ரன்களைக் குவித்திருந்தது. இதனால் இந்தியா வெல்லுமா என்ற சந்தேக நிலை. பின்னர் ஆட வந்த இந்தியாவுக்கு ஷேவாக்கும், கங்குலியும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 106 ரன்களைக் குவித்தனர்.

கங்குலி 60 ரன்களையும், ஷேவாக் 45 ரன்களையும் குவித்தனர். பின்னர் வந்தவர்களில் சச்சின் 14 ரன்களில் ஏமாற்றினார். ஆனால் யுவராஜ் சிங் 69 ரன்களை அள்ளினார். இருப்பினும் கடைசிக் கட்டத்தில் இந்தியாவுக்கு முக்கியமாக கை கொடுத்தது முகம்மது கைப்தான். அடித்து நொறுக்கி ஆடிய அவர் 87 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் இந்தியா 49.3 ஓவர்களிலேயே 8 விக்கெட் இழப்புக்கு 326 ரன்களைக் குவித்து அட்டகாசமாக கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா வெற்றி பெற்றதும் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த இந்திய வீரர்கள் ஆர்ப்பரித்தனர். அப்போதுதான் கங்குலி சட்டையைக் கழற்றி ஆவேசமாக குரல் எழுப்பினார். இந்த அற்புதமான வெற்றியை இந்தியா பெற்று நேற்றுடன் 14 ஆண்டுகள் ஆகி விட்டன.

உண்மையி்ல் அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-3 என்ற கணக்கில் சமன் செய்தது. வாங்கடே மைதானத்தில் நடந்த கடைசிப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.அப்போது இங்கிலாந்து வீரர் பிளின்டாப் தனது சட்டையைக் கழற்றி விட்டு மைதானத்தி்ல ஓடி ஆவேசமாக கொண்டாடினர். இதற்குப் பதிலடியாகத்தான் கங்குலி தனது சட்டையை கழற்றி ஆட்டினார்.

இதை ஷேவாக் சுட்டிக் காட்டி சவுரவ் கங்குலியை சல்மான் கானோடு ஒப்பிட்டு டிவிட் போட்டுள்ளார். சல்மான் கானும் இப்படித்தான் பல படங்களில் சட்டை இல்லாமல் வந்து போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டையைக் கழற்றினால்தான் சல்மான் கான் என்று கூறும் அளவுக்கு அவரது சட்டை இல்லாத பாடி ஷோ பிரபலம்.

Story first published: Thursday, July 14, 2016, 11:59 [IST]
Other articles published on Jul 14, 2016
English summary
Virender Sehwag has remembered the famous shirtless victory show of Ganguly during the India's win on Englandin 2002.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X