For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி 'விர்சுவல் ரியாலிட்டியில்' மேட்ச் பார்க்கலாம்.. மாஸ் டெக்னாலஜியுடன் களம் இறங்கும் ஐபிஎல்!

இனி ஐபிஎல் போட்டிகளை 'விர்சுவல் ரியாலிட்டி' தொழில்நுட்பம் மூலம் பார்க்கலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar

சென்னை: இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதற்காக அந்நிறுவனம் பாடாதபாடு பட்டு இருக்கிறது.

தற்போது அதன் காரணமாகவே தன்னுடைய ஒளிபரப்பில் புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது. இந்த ஐபிஎல் போட்டியை 'விர்சுவல் ரியாலிட்டி' தொழில்நுட்பம் மூலம் பார்க்கலாம் என்று கூறியுள்ளது.

இந்த தொழிநுட்பம் குறித்தும், அதன்பயன்பாடு குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளக்கி இருக்கிறது. அவர்கள் திட்டம் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்து இருக்கிறது.

எப்போது போட்டி

எப்போது போட்டி

இந்த வருடம் ஐபிஎல் போட்டி ஏப்ரல் 5ம் தேதி நடக்கிறது. இது சரியாக மே 21ம் தேதி வரை நடைபெறும். முதல் போட்டி மும்பைக்கும் சென்னைக்கும் இடையில் நடக்கிறது. இதன் ஒளிபரப்பு உரிமையை தற்போது ஸ்டார் நிறுவனம் வாங்கி உள்ளது. 2022 வரை அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பும்.

மாற்றம்

மாற்றம்

இந்த ஐபிஎல் போட்டியை 'ஹாட் ஸ்டார்' ஆப்பின் மூலமும் பார்க்க முடியும். ஆனால் அதனுடன் தற்போது 'விர்சுவல் ரியாலிட்டி'' தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அங்கு இருக்கும் 'விஆர்' என்ற ஆப்ஷனை அழுத்தி நாம் 'விர்சுவல் ரியாலிட்டியில்' போட்டியை பார்க்கலாம்.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

இதில் பார்ப்பது அப்படியே நேரில் பார்ப்பதை போல இருக்கும். நாம் எப்போது வேண்டுமானாலும் கேமராவின் கோணத்தை மாற்றி பிடித்த இடத்தை பிடித்த வீரரை பார்க்கலாம். வீடியோவை நிறுத்தி, பின் நோக்கி சென்று என நாமே அங்கு இருக்கும் கேமரா மேன் போல அங்கிள் மாற்றி விளையாட்டை ரசிக்கலாம்.

செயல்பாடு எப்படி

செயல்பாடு எப்படி

இதற்கு 'விர்சுவல் ரியாலிட்டி' கிளாஸ் ஒன்று தேவைப்படும். அதை மொபைலுடன் இணைத்து கண்களில் மாட்டிக்கொண்டு பார்க்கலாம். தற்போது இது அனைத்து கடைகளிலும் கிடைக்க தொடங்கி இருக்கிறது. எல்லா 'விர்சுவல் ரியாலிட்டி' கண்ணாடி மூலமும் போட்டியை காணலாம்.

விற்கமாட்டார்கள்

விற்கமாட்டார்கள்

இந்த கண்ணாடியை தற்போது ஸ்டார் நிறுவனம் விற்கும் எண்ணத்தில் இல்லை. நாமே இந்த முறை வெளியே வாங்கி கொள்ளலாம். அடுத்த வருடத்தில் இருந்து அவர்களே கண்ணாடியை விற்பார்கள் என்று கூறப்படுகிறது. 360 டிகிரி கோணத்தையும் இதில் பார்க்கலாம்.

இவ்வளவு பேரா

இவ்வளவு பேரா

மைதானம், டிவி என மொத்தமாக இந்த முறை போட்டியை 700 மில்லியன் மக்கள் பார்க்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரையும் கவரும் வண்ணத்தில் இந்த 'விர்சுவல் ரியாலிட்டி' கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த ஐபிஎல் போட்டியில் இன்னும் எவ்வளவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Friday, January 19, 2018, 14:28 [IST]
Other articles published on Jan 19, 2018
English summary
Star sports decided to use virtual reality tech in this year IPL match. We can watch IPL match using virtual reality glasses from hotstar. It will give people a new experience.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X