For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட், ராகுலை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.. விவிஎஸ் லக்ஷ்மன் அறிவுரை

மும்பை : இந்திய அணி இங்கிலாந்தில் படு தோல்வி அடைந்து நாடு திரும்பியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் வீரர்களுள் ஒருவரான விவிஎஸ் லக்ஷ்மன், இந்திய அணிக்கு தன் அறிவுரையை கூறியுள்ளார்.

இந்திய அணி எங்கெல்லாம் சறுக்குகிறது? எந்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறது என குறிப்பிட்டுள்ளார். அதே போல, யார் நன்றாக ஆடினார்கள் என்பதையும் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசங்களையும் குறிப்பிட்டுள்ளார். அவற்றை விரிவாக பார்ப்போம்.

மீண்டும் மீண்டும் முன்வரிசை சொதப்பல்

மீண்டும் மீண்டும் முன்வரிசை சொதப்பல்

இந்திய அணி இந்த தொடர் முழுவதும் சந்தித்த பெரிய பிரச்சனை எது என்றால் அது துவக்க வீரர்கள் விரைவில் வெளியேறியது தான். ஒரு போட்டியில் கூட இவர்கள் கூட்டணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மூன்றாம் போட்டியில் மட்டும் துவக்க இணை இரண்டு இன்னிங்க்ஸிலும் 60 ரன்கள் எடுத்தது. ஆனால், அப்போது கூட அவர்களில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. "துவக்க வீரர்கள் சொதப்புவது, பின்வரிசை வீரர்களுக்கு பெரிய அழுத்தமாக அமைந்தது. மீண்டும் மீண்டும் நடந்த இந்த தவறை இந்திய அணி நிச்சயம் ஆலோசிக்கும் என நினைக்கிறேன்" என கூறியுள்ளார் விவிஎஸ் லக்ஷ்மன்.

ரிஷப் பண்ட், ராகுல் அருமை

ரிஷப் பண்ட், ராகுல் அருமை

"ஐந்தாம் போட்டியின் கடைசி இன்னிங்க்ஸில் இமாலய இலக்கை துரத்திய இந்திய அணியில், வெற்றி பெற அதிக வாய்ப்பில்லை என தெரிந்து, ரிஷப் பண்ட், ராகுல் சுதந்திர உணர்வில் அருமையாக ஆடினார்கள். இந்த தொடரின் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களின் நேர்மறை எண்ணத்தை இந்தியா தன் இதயத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என கூறி இருக்கிறார் லக்ஷ்மன்.

வெற்றியில் பெற வேண்டும்

வெற்றியில் பெற வேண்டும்

இந்தியா ஒவ்வொரு போட்டியிலும் சில சமயங்களில் முன்னிலை வகித்தது. எனினும், அது வெற்றியாக மாறவில்லை. இது பற்றி, "இங்கிலாந்து 4-1 என தொடரில் வெற்றி பெற்றாலும், இந்த எண்கள் இரண்டு அணிகளும் எந்த அளவு போட்டி போட்டு ஆடினார்கள் என்பதை கூறாது. மாறாக, இது டெஸ்ட் போட்டியில் ஒரு மணி நேரம் கூட நீங்கள் பந்தை விட்டு உங்கள் கண்களை எடுக்கக் கூடாது என சொல்லும்" என கூறினார் லக்ஷ்மன். மேலும், இங்கிலாந்து அணி மூன்றாம் போட்டியின் தோல்வியில் இருந்து மீண்டு வந்து அடுத்த போட்டியை வென்றது. தொடரை கைப்பற்றிய நிலையிலும், ஐந்தாம் போட்டியில் அதிக உத்வேகம் காட்டி வென்றது. இவற்றைப் பார்த்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார்.

வெற்றியை நோக்கி போகாமல்

வெற்றியை நோக்கி போகாமல்

"ராகுல் ஆட்டமிழந்த உடன், இந்தியா டிரா செய்ய முயன்றது. ரிஷப் பண்ட் இருக்கும் வரை இந்தியா வெற்றிக்கு தேவையான ரன்களை நோக்கி சென்று இருக்க வேண்டும். கோலியின் முதல் டெஸ்ட் போட்டியான அடிலெயிட் போல இந்தியா செய்து இருக்க வேண்டும். அது தான் இந்த அணியின் குணம்" என தன் கருத்தை கூறினார் லக்ஷ்மன்.

Story first published: Thursday, September 13, 2018, 16:21 [IST]
Other articles published on Sep 13, 2018
English summary
VVS Laxman advice for Indian team after England loss, mentioned Rahul and Rishab Pant
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X