For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விவிஎஸ் லக்ஷ்மன் சுயசரிதை தலைப்பு வெளியானது.. மறக்க முடியாத இன்னிங்க்ஸ் தான் தலைப்பு

ஹைதராபாத் : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தன் சுயசரிதை புத்தகத்தை விரைவில் வெளியிட உள்ளார்.

அந்த புத்தகத்தின் அட்டைப்படம் மற்றும் தலைப்பை நேற்று ட்விட்டரில் வெளியிட்டார். புத்தகத்தின் தலைப்பாக தன் சிறந்த இன்னிங்க்ஸ்-ஐ வைத்துள்ளார்.

இந்த சுயசரிதையில் ஏதேனும் சர்ச்சைகள் இருக்குமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பிடித்திருக்கும் என நாம் கருதலாம்.

லக்ஷ்மன் வெளியிட்ட வீடியோ

விவிஎஸ் லக்ஷ்மன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது சுயசரிதை புத்தகத்தின் அட்டைப் படம் இடம் பெற்றுள்ளது. தன் சுயசரிதை புத்தகத்திற்கு "281 and Beyond" (281 அண்ட் பியான்ட்) என பெயரிட்டுள்ளார் லக்ஷ்மன்.

மறக்க முடியாத டெஸ்ட் போட்டி

மறக்க முடியாத டெஸ்ட் போட்டி

நம்மில் பலரால் மறக்க முடியாத ஒரு டெஸ்ட் போட்டியில் லக்ஷ்மன் அடித்த ரன்கள் தான் இந்த 281. 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியா ஃபாலோ-ஆன் வாங்கியது. முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்து இருந்தது. இந்தியாவோ 171 ரன்கள் மட்டுமே எடுத்து, இரண்டாம் இன்னிங்க்ஸ்-ஐ தொடர்ந்து ஆடியது.

லக்ஷ்மன் 281 ரன்கள் சாதனை

லக்ஷ்மன் 281 ரன்கள் சாதனை

அப்போது இந்திய அணிக்கு தூணாக இருந்து டிராவிட், லக்ஷ்மன் கூட்டணி அமைத்தனர். 5வது விக்கெட்டுக்கு 376 ரன்கள் எடுத்தனர். இதில் லக்ஷ்மன் 281 ரன்கள் அடித்து, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த இந்தியர் என்ற சாதனையை செய்தார். பின்னர், அந்த சாதனையை சேவாக் முறியடித்தார். லக்ஷ்மனின் தனிப்பட்ட கிரிக்கெட் வாழ்விலும், இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றிலும் மறக்க முடியாத ஒரு டெஸ்ட் போட்டி அதுதான். அதையே, தன் சுயசரிதை புத்தகத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார், இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரர் லக்ஷ்மன்.

சர்ச்சைக்குரிய ஓய்வு முடிவு

சர்ச்சைக்குரிய ஓய்வு முடிவு

விவிஎஸ் லக்ஷ்மனின் கிரிக்கெட் வாழ்வில் சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் என்றால் அது அவரது ஓய்வு முடிவு தான். 2012இல் நியூசீலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். எனினும், தொடர் துவங்கும் முன் தன் ஓய்வு முடிவை அறிவித்தார் லக்ஷ்மன்.

ஒய்வு முடிவு - என்ன நடந்தது?

ஒய்வு முடிவு - என்ன நடந்தது?

இது அந்த சமயத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அணிக்குள் ஏதோ பிரச்சனை எனவும், தோனிக்கும், லக்ஷ்மனுக்கும் மோதல் எனவும் ஒருபுறம் கூறப்பட்டது. மற்றொருபுறம், தேர்வாளர்கள் லக்ஷ்மனிடம் அந்த தொடரில் சரியாக ஆடாவிட்டால், அடுத்து டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காது என எச்சரித்ததால் அவர் விலகிவிட்டார் எனவும் கூறப்பட்டது. ஆனால், என்ன நடந்தது என்பது இதுவரை ரசிகர்களுக்கு தெரியவில்லை. ஒருவேளை இந்த புத்தகம் அதற்கான விடை அளிக்கலாம்.

புக் பேர் எல்லாம் நல்லா இருக்கு.. ஆனா, விலை 524 ரூபாய்-ன்றது தான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு

Story first published: Saturday, November 3, 2018, 9:45 [IST]
Other articles published on Nov 3, 2018
English summary
VVS Laxman unveils his Autobiography cover “281 and beyond”
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X