For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ஒரு சில ஷாட்கள் போதும்பா.. நியூசி, தொடரில் ரோகித் ஆடிய ஆட்டம்.. வசீம் ஜாஃபர் சுவாரஸ்ய கருத்து!

இந்தூர்: நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, பழைய அதிரடி மோடிற்கு சென்றதை பல்வேறு இடங்களில் பார்க்க முடிந்ததாக வசீம் ஜாஃபர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தூரில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஆடிய ருத்ர தாண்டவத்தால் 385 என்ற மெகா ஸ்கோரை இந்தியா பதிவு செய்தது.

இந்திய பேட்டர்கள் விளையாடியதை பார்த்து 400 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கடைசி நேரத்தில் குறைந்துவிட்டது. எனினும் நியூசிலாந்து அணி 295 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது.

15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா! 15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா!

ரோகித்தின் கம்பேக்

ரோகித்தின் கம்பேக்

இந்தியாவின் வெற்றியை தாண்டி ரோகித் சர்மாவின் கம்பேக் தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த 50 சர்வதேச இன்னிங்ஸ்களுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்து வந்த அவர், 1100 நாட்களுக்கு பிறகு முதல் சதத்தை அடித்தார். இதுமட்டுமல்லாமல் முதல் இரண்டு போட்டிகளில் 31, 51 என சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்.

 வசீம் ஜாஃபர் புகழாரம்

வசீம் ஜாஃபர் புகழாரம்

இந்நிலையில் இனி பழைய ரோகித்தை பார்க்கலாம் என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நியுசிலாந்து தொடரில் ரோகித் அட்டகாசமான ஃபார்மில் இருப்பதை பார்த்தேன். பழைய விண்டேஜ் ரோகித்தை பார்த்த போல இருந்தது. 50 ஓவர்களும் அதிரடி காட்ட முடியாது தான். ஆனால் அவரின் ஷாட் தேர்வுகள் மிகச்சிறப்பாக இருந்தன.

சாதாரணம் அல்ல

சாதாரணம் அல்ல

இது சிறிய மைதானம், பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என அமைந்த போதும், இஷ்டத்திற்கு சுழற்றாமல் சரியான கிரிக்கெட்டிங் ஷாட்களை ஆடினார்கள். ஓப்பனிங் வீரர்கள் ஓவருக்கு 9 - 10 ரன்கள் வரை அடித்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தால், அதே ரன்ரேட்டுடன் கடைசியில் முடிப்பது கடினம் ஆகும். அவர்களின் காம்போ பார்ப்பதற்கு நன்றாக உள்ளதாக வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

அடுத்த தொடர் எப்போது?

அடுத்த தொடர் எப்போது?

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் 16வது சீசன் வரும். எனவே இனி மே மாதம் தான் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 25, 2023, 18:35 [IST]
Other articles published on Jan 25, 2023
English summary
Former Indian cricketer Wasim jaffer thinks Vintage Rohit sharma is back in India vs New Zealand 3rd ODI, here is the reason why?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X