For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பஸ் டிரைவரான தல தோனி.. அப்டியே ஷாக் ஆகிட்டோம்.. சக வீரர்கள் பிரமிப்பு

டெல்லி : கடந்த 2008ல் கேப்டனாக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் சக வீரர்களை வைத்துக் கொண்டு டீமின் பேருந்தை முன்னாள் கேப்டன் தோனி ஓட்டியது பிரமிப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அந்த டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார்.

அந்த நேரத்தில் மைதானத்தில் இருந்து ஹோட்டலுக்கு அணியின் பேருந்தை அவர் ஓட்டி சென்றார்.

 2008ல இந்தியா ஜெர்சியை முதல்ல போட்டாரு... அப்புறமா நடந்ததெல்லாம் வரலாறு.. பிசிசிஐ பாராட்டு 2008ல இந்தியா ஜெர்சியை முதல்ல போட்டாரு... அப்புறமா நடந்ததெல்லாம் வரலாறு.. பிசிசிஐ பாராட்டு

ஆஸி.க்கு எதிரான தொடர்

ஆஸி.க்கு எதிரான தொடர்

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த 2008ல் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ஓய்வு பெற்ற நிலையில், முழு நேர டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றார் தோனி. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடிக் கொண்டிருந்தபோது தான் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.

பேருந்தை ஓட்டிய தோனி

பேருந்தை ஓட்டிய தோனி

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நாக்பூரில் 4வது மற்றும் இறுதிப்போட்டி நடைபெற்ற நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவர் அணியின் பேருந்து ஓட்டுநரை பின்னால் சென்று அமருமாறு கூறிவிட்டு தானே மைதானத்தில் இருந்து பேருந்தை ஹோட்டல் வரையில் ஓட்டி சக வீரர்களுக்கு பிரமிப்பை அளித்ததாக முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார்.

பேருந்தை ஓட்டிய தோனி

பேருந்தை ஓட்டிய தோனி

பலவிதமான வாகனங்களை ஓட்டுவதில் தோனிக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அவரது பண்ணை வீட்டில் விதவிதமான அரியவகை இருசக்கர வாகனங்கள் உள்ளன. மேலும் சமீபத்தில்கூட தோனி டிராக்டர் ஓட்டிய வீடியோ சமூகவலைதளத்தில் பகிரப்பட்டிருந்தது. இந்நிலையில், பேருந்தை அவர் ஓட்டியது பெரிய விஷயமில்லை.

எளிமையாக எதிர்கொள்ளும் தோனி

எளிமையாக எதிர்கொள்ளும் தோனி

கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய விவிஎஸ் லஷ்மன், தோனி அப்படித்தான் தன்னுடைய வாழ்க்கையை என்ஜாய் செய்வார் என்று தெரிவித்துள்ளார். ஒரு கிரிக்கெட்டராக அவர் மைதானத்தில் மட்டுமே இருப்பார், வெளியில் வந்துவிட்டால் எல்லாவற்றையும் மிக எளிமையாகவே எதிர்கொள்வார் என்றும் லஷ்மன் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, August 18, 2020, 19:56 [IST]
Other articles published on Aug 18, 2020
English summary
In the Nagpur Test vs Australia, Dhoni drove the bus from ground to hotel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X