For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு வருவார்.. அவரை ஏலத்தில் எடுப்போம்.. சவால் விடும் டோணி!

அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுப்போம் என்று டோணி கூறியுள்ளார்.

By Shyamsundar

சென்னை: எல்ஐசி, மெரினா இப்படி நிறைய விஷயம் சென்னையோட அடையாளமா இருந்தது. ஆனால் அதை எல்லாம் அடிச்சு நொறுக்கிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அந்த இடத்திற்கு வந்தது.

இரண்டு வருடம் தடை காரணமாக காணாமல் போய் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்போது மறுபடியும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பி இருக்கிறது. சென்னை அணியின் சொத்து டோணியும் அணிக்கு திரும்ப வந்து இருக்கிறார்.

இந்த சமயத்துல சென்னை அணி குறித்து டோணி பேட்டி கொடுத்து உள்ளார். இன்னும் சில நாட்களில் ஐபிஎல் ஏலம் நடக்க இருக்கும் நிலையில் அவர் முக்கியமான சவால் ஒன்று கொடுத்து இருக்கிறார்.

ஏலமோ ஏலம்

ஏலமோ ஏலம்

எப்போது போல இந்த முறையும் ஐபிஎல் ஏலம் பெங்களூரில் நடக்க இருக்கிறது. ஐபிஎல் ஏலம் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடக்க உள்ளது. அணிகளின் பட்ஜெட் 80 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சில வீரர்கள் ரிட்டென்ஷன் மூலம் அணிக்கு தேர்வாகி உள்ளனர்.

ரிட்டென்ஷன் என்றால்

ரிட்டென்ஷன் என்றால்

இந்த முறை ஐபிஎல் போட்டிக்கு சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் திரும்ப வந்து இருக்கிறது. இதனால் இதில் இருந்த வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இதில் மூன்று வீரர்களை அனைத்து அணிகளும் ஏலத்திற்கு முன்பே தக்க வைத்துக் கொள்ள முடியும். இதுவே ரிட்டென்ஷன் பாலிசி ஆகும். இதில் முக்கிய வீரர்கள் தக்க வைக்கப்பட்டார்கள்.

சென்னை அணி

சென்னை அணி

சென்னை அணிக்கு ரெய்னா, டோணி, ஜடேஜா ஆகியோர் திரும்பி இருக்கிறார்கள். அதேபோல் மும்பை அணிக்கு ரோஹித், பும்ரா, பாண்டியா திரும்பி உள்ளனர். கோஹ்லி, ஏபி டிவில்லியயர்ஸ், யுஸ்வேந்திர சஹல், பெங்களூர் அணிக்கு திரும்பி உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித், அஜிங்கியா ரஹானே, ஷான் வாட்சன் ராஜஸ்தான் அணிக்கு சென்றுள்ளனர்.

அஸ்வின் எங்கே

அஸ்வின் எங்கே

ஆனால் இதில் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்படவில்லை. டோணியின் படையில் முக்கியமான நபராக அஸ்வின் இருந்தார். ஆனால் அவரை இதில் சேர்க்கவில்லை. இதனால் சென்னை ரசிகர்கள் மிகவும் வருத்தத்திற்கு ஆளானார்கள். மேலும் அவர் வேறு அணிக்கு சென்று விடுவாரோ என்று கவலைப்பட்டனர்.

மீண்டும் வருவார்

மீண்டும் வருவார்

ஆனால் அவர் மீண்டும் சென்னை அணிக்கு வருவார் என்று டோணி கூறியுள்ளார். அதில் சென்னை அணிக்காக ஐபிஎல் ஏலத்தின் போது அஸ்வினை எடுப்போம் என்று கூறியுள்ளார். அஸ்வின் மீண்டும் சென்னைக்கு ஆடுவது உறுதி என்று அவர் சவால் விடுத்து இருக்கிறார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

டோணியின் இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் சென்னை எனக்கு இரண்டாவது வீடு என்று அவர் கூறியுள்ளார் . இதனால் மீண்டும் சென்னை கோப்பை வெல்லும் என்று நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

பெரிய தொகை

பெரிய தொகை

சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் நன்றாக இருப்பதால் பவுலிங்கிலும் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. எனவே ஐபிஎல் ஏலத்தில் பவுலர்கள் அதிகம் ஏலத்திற்கு எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அஸ்வினுக்கு ஏலத்தில் மிகவும் அதிக தொகை அளிக்கப்படும். ஏற்கனவே இவர் மீது பல அணிகள் தங்கள் கவனத்தை செலுத்தி இருக்கிறது.

Story first published: Friday, January 19, 2018, 10:50 [IST]
Other articles published on Jan 19, 2018
English summary
CSK, Rajasthan team has back to the IPL. IPL 2018 auction will be held in Bangalore on January 27 and 28. Dhoni, Raina, Jadeja has retained to CSK team. Dhoni says that he will take Ashwin in auction for CSK.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X