இந்தா பாருங்க.. இதுவா நோ பால்.. நடுவருக்கு பீதி கிளப்பிய கேப்டன் பொலார்ட்!

லக்னோ : லக்னோவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியின்போது கீரோன் பொலார்ட் வீசிய பந்தை நோ பால் என்று அறிவித்த நடுவரின் முடிவை மாற்ற பொலார்ட் வலியுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த திங்களன்று நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணிகளின் கேப்டன், பந்துவீச முடிவெடுத்திருந்தார். அவரின் இந்த முடிவால் அந்த அணி வெற்றியை தக்கவைத்தது.

இந்த தொடரில் 3க்கு 0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானை மேற்கிந்திய அணி வெற்றி கண்டது. ஆயினும் நடுவர்களுடன் தொடர்ந்து வாக்குவாதங்களில் ஈடுபடும் அந்த அணியின் கேப்டன் பொலார்ட், இந்த போட்டியின் போதும் நடுவரின் நோ பால் முடிவை மாற்ற வற்புறுத்தினார்.

 முடிவை மாற்ற வலியுறுத்தல்

முடிவை மாற்ற வலியுறுத்தல்

இறுதி போட்டியின்போது தான் பந்துவீசிய ஓவரில் விக்கெட்டுகள் எடுக்காமல் 5 ரன்களை எதிரணிக்கு பொலார்ட் கொடுத்திருந்த நிலையில், அவர், பந்துவீசிய போது கோட்டை தாண்டி அவரது கால் இருந்ததால் நடுவர் நோ-பால் என்று அறிவித்தார். அவரின் இந்த முடிவை மாற்ற பொலார்ட் வலியுறுத்தியது பார்வையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

 20 ரன்கள் மட்டுமே கொடுத்த கீரோன்

20 ரன்கள் மட்டுமே கொடுத்த கீரோன்

அந்தப் போட்டியில் கீரோன் பந்து வீசிய மொத்த ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆட்டத்தில் தனது அணி வெற்றி பெற உதவி புரிந்தார். இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானின் 250 ரன்கள் என்ற இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி தனது 49வது ஓவரில் எட்டியது.

 பொலார்ட் 32 ரன்கள்

பொலார்ட் 32 ரன்கள்

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சில் 26 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து பேட்டிங்கிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார் பொலார்ட். மேலும் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் தொடர்க்க வீரர் ஷாய் ஹோப் 109 ரன்கள் எடுத்தார்.

 ஆப்கானிஸ்தானுடன் மோதல்

ஆப்கானிஸ்தானுடன் மோதல்

தொடர்ந்து லக்னோவில் வியாழக்கிழமை துவங்கி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தானுடன் மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் லக்னோவின் அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

 தொடர் மோதல்

தொடர் மோதல்

புளோரிடாவில் இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் நடுவர்களின் உத்தரவை மீறி செயல்பட்டதற்காக பொலார்ட்டுக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நடுவரின் உத்தரவை மாற்ற வற்புறுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
West indies captain pollard hillariously forced umpire to change his decision
Story first published: Wednesday, November 13, 2019, 10:27 [IST]
Other articles published on Nov 13, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X