For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கருப்பினத்தவருக்கு ஆதரவாக லோகோ... மேற்கிந்திய தீவுகள் அணி தீவிரம்

லண்டன் : இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியினர் வரும் 8ம் தேதி முதல் இங்கிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளனர். இதற்கென அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.

Recommended Video

West Indies players to wear 'Black Lives Matter' logo in England series

இந்நிலையில் கருப்பினத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் இந்த தொடரில் அவர்களுக்கு ஆதரவாக 'ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்' என்ற லோகோவை அவர்கள் தங்களது டி-சர்ட்டில் அணியவுள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்காவில் கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு சர்வதேச அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 ENG vs WI : உலகக்கோப்பை நாயகனுக்கு அடித்த லக்.. இங்கிலாந்து அணிக்கு புதிய கேப்டன்! ENG vs WI : உலகக்கோப்பை நாயகனுக்கு அடித்த லக்.. இங்கிலாந்து அணிக்கு புதிய கேப்டன்!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வரும் 8ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளனர். முதல் போட்டி சௌதாம்ப்டனின் ஏஜியஸ் பௌல் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கென மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போட்டிகளிலும் விளையாடவுள்ளனர்.

'ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்' லோகோ

'ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்' லோகோ

இந்நிலையில், இந்த தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள், கருப்பினத்தவர்களின் பாதுகாப்பு மற்றும் சமநிலையை பாதுகாக்கும்வகையில் 'ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்' என்ற லோகோவை தங்களது டி-சர்ட்டில் அணிந்து விளையாடவுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

அலிசா ஹோசன்னா வடிவமைப்பு

அலிசா ஹோசன்னா வடிவமைப்பு

இந்த லோகோவை வீரர்கள் தங்களது டி-சர்ட்டில் அணிய ஐசிசியும் தனது அனுமதியை அளித்துள்ளது. அலிசா ஹோசன்னா என்பவர் இந்த லோகோவை வடிவமைத்துள்ளார். முன்னதாக இந்த மாத துவக்கத்தில் துவங்கிய 20 பிரீமியர் லீக் கால்பந்தாட்ட கிளப்களின் போட்டிகளில் இந்த லோகோ அணியப்பட்டுள்ளது.

ஊழலுக்கு இணையான விவகாரம்

ஊழலுக்கு இணையான விவகாரம்

இந்நிலையில், இந்த விவகாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடமை தங்களுக்கு உள்ளதாக தெரிவித்துள்ள ஹோல்டர், ஊக்கமருந்து மற்றும் ஊழலுக்கு இணையாக இந்த விவகாரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு மனிதனும் தன்னுடைய நிறத்தை கொண்டு மதிக்கப்படக்கூடாது என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, June 29, 2020, 17:42 [IST]
Other articles published on Jun 29, 2020
English summary
There must be equality and there must be unity -Holder
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X