For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன மாதிரியான கிரிக்கெட் கேரியர்... சான்சே இல்லை.. கேப்டன் கூல் குறித்து மைக்கேல் ஹோல்டிங் பாராட்டு

டெல்லி : சர்வதேச கிரிக்கெட்டில் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி எவ்வளவு சிறப்பான கேரியரை கொண்டிருந்தார் என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Recommended Video

Dhoni- ஐ வியந்து பாராட்டிய முன்னாள் West Indies வீரர்

போட்டிகளின் போது ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதை அமைதியாக கையாண்டவர் தோனி என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடங்களாக குனிந்தபடியே அவர் தன்னுடைய விக்கெட் கீப்பிங்கை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்காக அவர் தனது உடலை மிகவும் பிட்டாக வைத்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பு

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பு

சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த 15ம் தேதி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு அறிவித்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் தனது ஓய்வு குறித்து முடிவெடுக்க அவருக்கு முழு சுதந்திரம் உண்டு என்பதை அறிந்துள்ளனர். இந்நிலையில் வரும் மாதம் 19ம் தேதி யூஏஇயில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக தன்னுடைய சிஎஸ்கே அணி வீரர்களுடன் தோனி அங்கு சென்றுள்ளார்.

மைக்கேல் ஹோல்டிங் வியப்பு

மைக்கேல் ஹோல்டிங் வியப்பு

இதனிடையே, என்ன மாதிரியான கிரிக்கெட் கேரியரை தோனி கொண்டிருந்தார் என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். போட்டிகளின்போது எந்தவித சூழலிலும் தன்னுடைய பொறுமையை கைவிடாமல் அதை சமாளிக்கும் திறன் தோனிக்கு இருந்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

அணி வீரர்கள் சிறப்பாக விளையாட உதவி

அணி வீரர்கள் சிறப்பாக விளையாட உதவி

எந்த சூழலிலும் அவர் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியதில்லை என்றும் தனது அணி வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவர்களுடன் சிறிது நேரம் அவர் பேசினால், உடனடியாக அந்த சூழலே மாறிவிடும் என்றும் அந்த அளவிற்கு அவர் சிறப்பானவர் என்றும் ஹோல்டிங் மேலும் கூறினார்.

உடலை பிட்டாக வைத்துக்கொண்ட தோனி

உடலை பிட்டாக வைத்துக்கொண்ட தோனி

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 5,000 ரன்களை தோனி பெற்றுள்ளதாகவும் அவர் சிறப்பான பேட்ஸ்மேன் இல்லையென்றாலும் இதை அவர் சாதித்துள்ளதாகவும் ஹோல்டிங் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளிலும் கூட குனிந்தபடியே விக்கெட் கீப்பிங்கை பல வருடங்கள் அவர் செய்ததாகவும், உடல் மிகுந்த பிட்டாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, August 23, 2020, 10:44 [IST]
Other articles published on Aug 23, 2020
English summary
When he was captaining, you never saw him get excited -Holding
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X