For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் பாட்டுக்கு சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தாரு... தோனியின் ஓய்வு தருணங்கள்.. பாலாஜி சிலிர்ப்பு

துபாய் : கடந்த 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி.

Recommended Video

Dhoni- ஐ வியந்து பாராட்டிய முன்னாள் West Indies வீரர்

அந்த தருணத்தில் அவருடன் இருந்த சிஎஸ்கே பௌலிங் கோச் லஷ்மிபதி பாலாஜி, அந்த நேரத்தில் அவர் தன்னுடன் எப்படி நடந்து கொண்டார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இந்த நூற்றாண்டிலேயே சிறப்பான தனித்தன்மையுடன் விளங்கக்கூடிய ஒரே வீரர் எம்எஸ் தோனிதான் என்றும் பாலாஜி உச்சி முகர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறப்பான டெஸ்ட் அணி இதுதான்... சுனில் கவாஸ்கர் பெருமிதம்இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறப்பான டெஸ்ட் அணி இதுதான்... சுனில் கவாஸ்கர் பெருமிதம்

முன்னதாக பயிற்சியில் ஈடுபட்ட தோனி

முன்னதாக பயிற்சியில் ஈடுபட்ட தோனி

கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. முன்னதாக சிஎஸ்கே வீரர்களுடன் சென்னை சிதம்பரம் மைதானத்தில் பௌலிங் கோச் லஷ்மிபதி பாலாஜியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி இதையடுத்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.

அலட்டிக் கொள்ளாத தோனி

அலட்டிக் கொள்ளாத தோனி

இதுகுறித்து தன்னிடம் எதுவும் பேசிக் கொள்ளாத தோனி, தொடர்ந்து ஓய்வு குறித்த அறிவிப்பை செய்துவிட்டு, தன்னிடம் வந்து, மைதானத்தில் பிட்ச்சில் அதிகமாக தண்ணீர் விட அறிவுறுத்தியதாகவும், இதையடுத்து சிறிது நேரம் கழித்து அவரது ஓய்வு குறித்து தனக்கு தெரியவந்ததாகவும், அவரின் இந்த போக்கு தனக்கு ஆச்சரியத்தை அளித்ததாகவும் பாலாஜி தெரிவித்துள்ளார்.

வாழ்வின் முக்கிய தருணம்

வாழ்வின் முக்கிய தருணம்

அவரின் ஓய்வு அறிவிப்பு என்பது மிகவும் முக்கியமான தருணம் என்பதை சுட்டிக் காட்டிய பாலாஜி, ஆனால் அந்த நேரத்திலும் அதை அமைதியாக கடந்து சென்ற அவரது இயல்பு குறித்த வியப்பிலிருந்து தான் வெளிவர தனக்கு அதிக நேரம் பிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டிலேயே இந்த நூற்றாண்டில் இத்தகைய வீரரை காண்பது அரிது என்றும் தெரிவித்துள்ளார்.

மாற்றியமைத்த தோனி

மாற்றியமைத்த தோனி

ஒரு போட்டியின் இறுதி ஓவரில் 20 ரன்கள் தேவையென்றால் தான் முதலில் தேர்வு செய்வது தோனியாக மட்டுமே இருக்க முடியும் என்றும் பாலாஜி தெரிவித்துள்ளார். அவருடைய தலைமை மற்றும் பேட்டிங் ஸ்டைல் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமானது என்றும் கேப்டன் குறித்த பழமையான கருத்தை மாற்றி அமைத்தவர் தோனி என்றும் பாலாஜி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, August 23, 2020, 14:42 [IST]
Other articles published on Aug 23, 2020
English summary
His leadership changed the perception of leadership among all captains -Balaji
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X