For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போடு ! இது சிஎஸ்கேவின் வேற லெவல் மூவ்.. U-19 இந்திய வீரர்களை தட்டி தூக்கியது.. அப்படி என்ன ஸ்பெஷல்

கொச்சி : ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே யாரும் எதிர்பாராத விதமாக சிறப்பாக செயல்பட்டு, இளம் வீரர்களை தட்டி தூக்கி இருக்கிறது. ஏலத்தில் மிக்சர் சாப்படும் அணி என்று ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டாலும், தற்போது செம பதிலடி கொடுத்துள்ளனர்.

சிவாஜி படத்தில் வில்லன், ஆதிகேசவன் என்ன பொட்டு வச்சிட்டு பொங்கல் சாப்பிட்றவன் நினைச்சியா. காசிமேடு ஆதி டா. பழைய போலீஸ் ரெக்கார்ட் எடுத்து பாரு என ஒரு வசனம பேசுவார். தற்போது அதற்கு ஏற்றார் போல், சிஎஸ்கே வினர் இந்த ஏலத்தில் யுத்திகளை அமைத்து தூககினர்

ஏற்கனவே பென் ஸ்டோக்ஸை 16 கோடி 25 லட்சம் ரூபாய் கொடுத்து பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே தூககியது. அனுபவம் வாய்ந்த ரஹானே அடிப்படை விலைக்கே கிடைத்திருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. உச்சம் தொட்ட சாம் கரண்.. சிஎஸ்கே vs பஞ்சாப் இடையே நடந்த யுத்தம்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. உச்சம் தொட்ட சாம் கரண்.. சிஎஸ்கே vs பஞ்சாப் இடையே நடந்த யுத்தம்!

ஷாயிக் ரஷித்

ஷாயிக் ரஷித்

இதனையடுத்து கைவசம் இருந்த பணத்தை வைத்து, எதிர்காலத்தை கொண்ட இரண்டு இளம் வீரர்களை சிஎஸ்கே அணி தட்டி தூக்கியது. ஐதராபாத்தை சேர்ந்த 18 வயது வீரரான ஷாயிக் ரஷித் , அண்டர் 19 உலககோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பையும் கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்தினார்.

திறமை வாய்ந்தவர்

திறமை வாய்ந்தவர்

ஐதராபாத்தை சேர்ந்தவர் என்பதால், முகமது அசாரூதீன், விவிஎஸ் போன்றோரின் பேட்டிங் ஸ்டைலும் ஷாயிக் ரஷித்துக்கு உள்ளது, அண்டர் 19 உலககோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 94 ரன்கள் அடித்து இருக்கிறார். ரஞ்சி போட்டியிலும் விளையாடிய அனுபவம் இருக்கிறது. நெருக்கடியான கட்டத்தில் விளையாடக் கூடியவர்.

நிசாந்த் சிந்து யார்

நிசாந்த் சிந்து யார்

நிசாந்த் சிந்து யார் தோனியின் கீழ் அவர் பட்டை தீட்டப்பட்டால் சிஎஸ்கேக்கும், இந்தியாவின் எதிர்காலத்துக்கும் அது நல்லது. இதனைத் தொடர்ந்து மற்றொரு அண்டர் 19 வீரரான ஆல்ரவுண்டர் நிஷாந்த் சிந்துவை சிஎஸ்கே 60 லட்சம் ரூபாய் கொடுத்து தட்டி தூககியது. இவர் அண்டர் 19 உலக கோப்பையில் பேட்டிங்கில் அரைசதம் அடித்ததுடன், பந்துவீச்சிலும் கலக்கி இருக்கிறார்.

 ரஞ்சியில் சதம்

ரஞ்சியில் சதம்

தற்போது ரஞ்சி கோப்பையிலும் பரோடாவுக்கு எதிராக சதம் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஹரி நிசாந்தின் பந்துவீச்சும் சிஎஸ்கே வின் ஆடுகளத்திற்கு சிறப்பாக உதவும். இதன் மூலம் 2 இளம் வீரர்களை மொத்தமே 80 லட்சம் ரூபாய் செலவு செய்து சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது மாஸ்டர் மூவாக கருதப்படுகிறது.

Story first published: Friday, December 23, 2022, 17:56 [IST]
Other articles published on Dec 23, 2022
English summary
Who is shaik Rasheed and Nishant sindhu - csk Bought in IPL auction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X