டோணியா? தினேஷ் கார்த்திக்கா? யார் பெஸ்ட் கேப்டன்.. 10 வருட கேள்விக்கு இன்று பதில் கிடைக்கும்!

Posted By:

சென்னை: சேப்பாக்கத்தில் இன்று சென்னை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கும் நிலையில் டோணி சிறந்த கேப்டனா, தினேஷ் கார்த்திக் சிறந்த கேப்டனா என்று கேள்வி எழுந்து இருக்கிறது.

சரியாக பத்து வருடங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் கிரிக்கெட் உலக ரகசியத்திற்கு இன்று பதில் கிடைக்க உள்ளது. இந்த போட்டி ஏற்கனவே காவிரி போராட்டம் காரணமாக வைரல் ஆகியுள்ளது.

அதே சமயம் சென்னையில் இரண்டு வருடத்திற்கு பின் சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. இதுவும் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இந்திய அணியில் டோணி, தினேஷ் கார்த்திக் இரண்டு பேரும் ஒன்றாகவே சேர்ந்தார்கள். ஆனால் ஒருவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பும், பெருமையும் இன்னொருவருக்கு கிடைக்கவில்லை. 2004 செப்டம்பர் மாதம் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்ந்தார். அதே வருடம் டிசம்பர் மாதம் டோணி இந்திய அணியில் சேர்ந்தார். அணியில் சேர்ந்ததில் இருந்து டோணி பெரிய வீரராக வளர்ந்தார்.

யார் கேப்டன் ஆவது

யார் கேப்டன் ஆவது

டோணிக்கு முன்பு தினேஷ் கார்த்திக்குக்கு கேப்டன் வாய்ப்பு இருந்தது. இந்திய அணி கங்குலி, டிராவிட் இல்லாமல் கஷ்டப்பட்ட போது தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமிக்கலாம் என்று கிரேக் சாப்பல் கூறியிருந்தார். ஆனால் அவர் கேப்டனாக அறிவிக்கப்பட இருந்த சமயத்தில் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு டோணிக்கு சென்றது, ஆனால் அதில் இந்திய அணிக்கு கோடி நன்மை கிடைத்தது வரலாறு.

அணியில் இல்லை

அணியில் இல்லை

இருவரும் கீப்பர் என்பதால் தினேஷ் கார்த்திக்கின் வாய்ப்பு அப்படியே குறைந்து போனது. வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்ட தினேஷ் கார்த்திக் பார்ம் அவுட்டாகியும் கஷ்டப்பட்டார். இதனால் இந்திய அணிக்கு வரமுடியாமல் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பெரிய அளவில் கஷ்டப்பட்டார்.

நிரூபணம்

நிரூபணம்

கடைசியாக நடந்த இரண்டு தொடர்களிலும் தினேஷ் கார்த்திக் தன்னை நிரூபித்துள்ளார். இவர் இந்திய உலகக் கோப்பை அணியில் எப்படியும் இருப்பார் என்று தகவல்கள் கசிந்துள்ளது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் பெரியவரா, டோணி பெரியவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் டோணி உலகக் கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இன்று

இன்று

இந்த நிலையில் 10 வருடமாக இருக்கும் இந்த கேள்விக்கு இன்று பதில் கிடைக்க உள்ளது. சென்னையும், கொல்கத்தாவுக்கு மோதும் போட்டியில் இரண்டு பேரின் தலைமைப்பண்பும் ஒப்பிட்டு பார்க்கப்படும். அதே சமயம் இருவரின் தனிப்பட்ட ஆட்டமும் கூட ஒப்பிட்டு பார்க்கப்படும். இதனால் இந்த போட்டி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Kolkatta team faces Chennai team in Chepauk stadium. Now a question raises whether Dinesh is a good captain or Dhoni.
Story first published: Tuesday, April 10, 2018, 13:32 [IST]
Other articles published on Apr 10, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற