இந்திய கிரிக்கெட் வீரர்களின் ரத்த மாதிரியை கேட்கும் பிசிசிஐ... காரணம் தெரியுமா?

Posted By:

டெல்லி: பிசிசிஐ அமைப்பு இந்திய கிரிக்கெட் வீரர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்வதற்காக கேட்டு இருக்கிறது. அவர்களின் ரத்தத்தில் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும்.

உலகிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் மட்டும் தான் இது போன்ற டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும் சோதனை முதன்முதலாக நடத்தப்பட இருக்கிறது. தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் மட்டும் இல்லாமல் வேறு சில வீரர்களும் இந்த சோதனைக்கு உள்ளாக இருக்கின்றனர்.

இந்திய வீரர்களை அணியில் தேர்ந்தெடுப்பதில் யோ-யோ டெஸ்ட் எந்த அளவுக்கு பங்கு வகிக்கிறதோ அதே அளவுக்கு இந்த டிஎன்ஏ டெஸ்டும் பங்கு வகிக்கும்.

 டிஎன்ஏ டெஸ்ட்

டிஎன்ஏ டெஸ்ட்

இந்திய வீரர்களின் உடல் பருமனை அளவிடுவதற்காக சில நாட்கள் முன்பு வரை 'ஸ்கின்ஃபோல்ட் டெஸ்ட்' என்ற பழமையான சோதனை செய்யப்பட்டு வந்தது. இதன்படி உடலில் சில அளவு கோல்களை வைத்து அளவிடுவர். ஆனால் இதற்கு பதிலாக இனி உடலின் எல்லாவிதமான திறனையும் கண்டுபிடிக்கும் வகையில் டிஎன்ஏ டெஸ்ட் நடத்தப்பட இருக்கிறது. இந்த சோதனையை இந்திய அணியின் பயிற்சி குழுவில் இருக்கும் சங்கர் பாசு என்ற நபர் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

எப்படி சோதனை செய்வார்கள்

எப்படி சோதனை செய்வார்கள்

இந்த டிஎன்ஏ டெஸ்ட் படி முதலில் வீரர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்படும். அந்த ரத்த மாதிரிகள் சோதனை சாலைக்கு அனுப்பப்பட்டு 40 விதமான சோதனைக்கு உள்ளாக்கப்படும். இந்த சோதனையை செய்வதற்கு ஒரு வீரருக்கு 30,000 ரூபாய் வரை செலவு ஆகும். இனி அணியில் சேர இருக்கும் எல்லா வீரர்களும் இந்த சோதனையில் நல்ல ரிசல்ட் வந்தால் மட்டுமே அணியில் இணைய முடியும்.

சோதனையின் பயன் என்ன

சோதனையின் பயன் என்ன

வீரர்களுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பது நிறைய வகையில் பயன் அளிக்கும். முக்கியமாக எந்த வீரர் எப்போது பார்மில் இருக்கிறார், உடல் தகுதி எப்படி இருக்கிறது போன்றவைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இதன் மூலம் ஒரு வீரர் தன்னுடைய வேகத்தையும், களத்தில் செயலாற்றும் திறனையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் ஏற்ற டயட் முறையை உருவாக்க முடியும் என கூறப்படுகிறது.

இதுதான் முதல் முறை

இதுதான் முதல் முறை

இந்த தேர்வு முறை முதலில் 'என்பிஏ' பாஸ்கெட்பால் விளையாட்டில் மட்டும்தான் செய்யப்பட்டு வந்தது. தனது வீரர்களின் உடல் தகுதியில் கறாராக இருக்கும் ஆஸ்திரேலிய அணி கூட இந்த தேர்வில் ஈடுபடவில்லை. ஆனால் இந்திய அணிதான் முதன்முறையாக இதில் களம் இறங்கி இருக்கிறது. இது பழைய சோதனை முறைக்கு மட்டும் மாற்றாக இல்லாமல் தற்போது நடைமுறையில் இருக்கும் யோ-யோ டெஸ்ட் முறைக்கும் நல்ல மாற்றாக இருக்கும்.

Story first published: Monday, November 13, 2017, 12:04 [IST]
Other articles published on Nov 13, 2017
Please Wait while comments are loading...