கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை..!! ஆனால் நடந்தது என்ன தெரியமா? இங்கிலாந்தை அலற விட்ட மே.இ.தீவுகள் அணி..

பிரிட்ஜ் டவுன்: மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்றது

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர் தோல்வியால் துவண்டு போன இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் 103 ரன்களுக்கு சுருண்டது

2021 ஆண்டிற்கான ஐ.சி.சி. சிறந்த டெஸ்ட் அணி..!! 3 இந்திய வீரர்களுக்கு இடம்2021 ஆண்டிற்கான ஐ.சி.சி. சிறந்த டெஸ்ட் அணி..!! 3 இந்திய வீரர்களுக்கு இடம்

இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி இருந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

இதனையடுத்து முதல் போட்டியில் தடுமாறிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் இம்முறை அதிரடியை காட்டினர்.ஜேசன் ராய் 45 ரன்களும், டாம் பேன்டன் 25 ரன்களும் எடுக்க,ஜேம்ஸ் வின்ஸ் 4 ரன்களில் வெளியேறினார்.சிறப்பாக விளையாடிய மொயின் அலி 24 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.

171 ரன்கள்

171 ரன்கள்

மொயின் அலி ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் மார்கன் உள்ளிட்ட நடுவரிசை வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். எனினும் கிறிஸ் ஜார்டன் 15 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டு இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் ஃபெபியன் ஆலன், ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக இருந்தது. மொயின் அலி, ஆதில் ரஷித் சுழலில் சிக்கிய அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 98 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது

 30 ரன்கள் தேவை

30 ரன்கள் தேவை

இதனையடுத்து ஜோடி சேர்ந்த அகேல் உசைன், செஃபர்ட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் கடைசி ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. முகமுத் கடைசி ஓவரை வீச அகேல் ஹூசைன், இரண்டு பவுண்டரிகள், 3 ஹாட்ரிக் சிக்சர்களை விளாசினார்.கடைசி ஓவரில் 2 பந்துகள் WIDE வேறு இங்கிலாந்து போட்டது. இதனால் மேற்கிந்தியத் திவுகள் அணி கடைசி ஓவரில் 28 ரன்கள் சேர்த்து, 1 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
WI vs Eng 2nd T20 – WI need 30 runs to Win from 6 balls then see what happenedகடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை..!! ஆனால் நடந்தது என்ன தெரியமா? இங்கிலாந்தை அலற விட்ட மே.இ.தீவுகள் அணி..
Story first published: Monday, January 24, 2022, 14:52 [IST]
Other articles published on Jan 24, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X