For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இம்ரான் கான் சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டு.. 105 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்.. ரசிகர்கள் செம கலாய்!!

Recommended Video

போட்டிக்கு முன்பே பாகிஸ்தானை கணித்த வாசிம் அக்ரம்!!

நாட்டிங்ஹம் : உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் படுமோசமாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை ஒட்டி பாகிஸ்தான் அணியை மிக மோசமாக கலாய்த்து வருகிறார்கள் இணையவாசிகள்.

குறிப்பாக பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனுமான இம்ரான் கான் கூறிய வாழ்த்துச் செய்தியை வைத்தே பாகிஸ்தான் அணியை கலாய்த்து வருகிறார்கள்.

டி 20 போட்டியை விட மோசமாக விளையாடி பாக்..! பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்.. 7 விக். வித்தியாசத்தில் வெற்றி டி 20 போட்டியை விட மோசமாக விளையாடி பாக்..! பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்.. 7 விக். வித்தியாசத்தில் வெற்றி

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

2019 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பேட்டிங் பிட்ச் என்பதால் இரு அணிகளும் ரன் மழை பொழியப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

மிரண்டனர்

மிரண்டனர்

ஆனால், பாகிஸ்தான் அணி பவுன்சர் பந்துகளை கண்டு மிரண்டனர். அதை சரியாக கணித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்களுக்கு இயல்பாகவே வரும், பவுன்சர் வகை பந்துவீச்சை கட்டவிழ்த்துவிட்டனர். அதற்கேற்ப பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களும் தொடர்ந்து விக்கெட்டை கோட்டைவிட்டனர்.

105 ரன்கள்

பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் 105 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 13.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியின் பாகிஸ்தான் அணியின் மோசமான பேட்டிங்கை இணையத்தில் கலாய்த்து தள்ளினர்.

இம்ரான் கான் சொன்னது என்ன?

இந்தப் போட்டிக்கு முன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உலகக்கோப்பை தொடருக்கான வாழ்த்துச் செய்தியில், "உங்கள் 100 சதவீதத்தை கொடுங்கள்" என கூறி இருந்தார். அதை பாகிஸ்தான் அணியும், கேப்டன் சர்ப்ராஸ் கானும் தவறாக புரிந்து கொண்டு, 100 சதவீதம் என்பதை 105 ரன்கள் என நினைத்துக் கொண்டார்கள் என கிண்டல் செய்து வருகிறார்கள்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

பாகிஸ்தான் அணி டி20 போல ஆடி வெறும் 21.4 ஓவர்களில் ஆல்-அவுட் ஆனது பாகிஸ்தான் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது. உலகக்கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தை தாண்டி அரையிறுதி சென்றாலே, அதிகம் என்ற நிலையே உள்ளது.

பிரதமர் தரும் அழுத்தம்

பிரதமர் தரும் அழுத்தம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 1992இல் உலகக்கோப்பை வென்று கொடுத்த பாகிஸ்தான் அணி கேப்டன் என்பதும், அந்த அணிக்கு பெரும் அழுத்தமாக உள்ளது. அந்த அணியின் செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது, குறைந்த பட்சம் இந்திய அணியை வீழ்த்தி விட வேண்டும் என்பதே அந்த அணியின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்தியாவை வீழ்த்தினால்..

இந்தியாவை வீழ்த்தினால்..

உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை. இந்த உலகக்கோப்பை தொடரில் அதை மாற்றி, பாகிஸ்தான் அணி, இந்திய அணியை வீழ்த்தி விட்டால், பாகிஸ்தான் ரசிகர்கள் குஷியாகி, மற்ற தோல்விகளை மறந்துவிடுவார்கள் என்ற திட்டம் தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Friday, May 31, 2019, 19:49 [IST]
Other articles published on May 31, 2019
English summary
WI vs PAK Cricket World cup 2019 : Pakistan team misunderstood PM Imran Khan’s wish
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X