''என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றினார்''... பாகிஸ்தான் கேப்டன் மீது இளம்பெண் பகீர் புகார்!

லாகூர்: சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றினார் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மீது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

அவரிடம் இருந்து எனக்கு நீதி பெற்று தர வேணடும் எனவும் அந்த பெண் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து பாபர் அசாம் தரப்பில் இருந்தோ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்தோ எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம். இவர் விராட் கோலி , ஸ்டிபன் ஸ்மித் வில்லியம்சன் ஜோ ரூட் போன்ற உலக தரம் வாய்ந்த வீரர்கள் வரிசையில் வரக்கூடிய தரம் மிக்க வீரராவார். அந்நாட்டு ரசிகர்களின் நாயகனாக உருவெடுத்துள்ள பாபர் அசாம், தற்போது சர்ச்சைகளின் நாயகனாக உருவெடுத்துள்ளார்.

தற்போது பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பாபர் அசாம் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரபலமான கிரிக்கெட் வீரராக இல்லாதபோதே பாபர் அசாமை எனக்குத் தெரியும். நானும்,அவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். ஒருவரை ஒருவர் காதலித்த நாங்கள், திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தோம். இதுபற்றி எங்கள் குடும்பங்களுக்கு தெரிவித்தபோது அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் நானும், அவரும் நீதிமன்றம் மூலம் திருமணம் செய்ய முடிவு செய்தோம். 2011-ல் திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை பல இடங்களில் தங்க வைத்தார்.

ஆஸி சரண்டர்.. கூட்டணி போட்டு காலி செய்த பும்ரா, நடராஜன், தாக்குர்.. இந்தியா வெற்றி!

மேலும், திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னுடன் பாலியல் உறவு வைத்து கர்ப்பமாக்கினார். இதை யாரிடமும் செல்லக்கூடாது என அடித்து மிரட்டிய அவர் தனது நண்பர்களின் உதவியுடன் கருக்கலைப்பு செய்தார். இதுகுறித்து 2017 -ம் ஆண்டு பாபருக்கு எதிராக நசிராபாத் போலீசில் புகார் கொடுத்தேன். எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அந்த பெண் தெரிவித்தார்.

பாபர் அசாம் மீது புகார் கூறிய பெண் தாக்கல் செய்த மனு தொடர்பாக லாகூரில் உள்ள அமர்வு நீதிமன்றம் உள்ளூர் போலீசாரிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அனால் பெண்ணின் குற்றச்சாட்டுகளுக்கு பாபர் அசாம் தரப்பில் இருந்தோ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்தோ எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
The teenager has complained to Pakistan captain Babur Assam that he cheated on her by claiming to be pregnant.
Story first published: Wednesday, December 2, 2020, 18:41 [IST]
Other articles published on Dec 2, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X