For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த விஷயத்தில் சச்சினை விட கோலி தான் பெஸ்ட்.. அதுக்கு காரணம் தோனி.. ஆச்சரிய தகவல் சொன்ன ஆஸி. வீரர்!

சிட்னி : கிரிக்கெட் உலகில் சச்சினுக்கு அடுத்து, சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயரை பெற்று வருகிறார் விராட் கோலி.

ஆனால், சச்சினிடம் இருந்து கோலி எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. தோனியிடம் இருந்து ஒரு முக்கிய விஷயத்தை கற்றுக் கொண்டு சச்சினை விட அதை சிறப்பாக செய்து வருகிறார் என கூறி இருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆன்டி பிக்கேல்.

உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்... கரெக்ட்...! அவரு இல்லாமலா? உலக கோப்பையின் பெஸ்ட் விக்கெட் கீப்பர்கள்... கரெக்ட்...! அவரு இல்லாமலா?

சிறந்த பினிஷர்

சிறந்த பினிஷர்

இந்திய அணியில் சிறந்த பினிஷர் என்றால் அது தோனி தான். தோனி சில போட்டிகளில் சறுக்கி இருந்தாலும், பல போட்டிகளில் தோல்விப் பாதையில் இருந்து அணியை திசை மாற்றி வெற்றி பெற வைத்துள்ளார்.

கற்றுக்கொண்ட கோலி

கற்றுக்கொண்ட கோலி

தோனியின் இந்த வித்தையை கோலி கற்றுக் கொண்டு, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதே சமயம், சச்சினிடம் இருந்து கோலி எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்கிறார் ஆன்டி பிக்கேல்.

இதுதான் வித்தியாசம்

இதுதான் வித்தியாசம்

போட்டிகளை முடிக்கும் திறன்தான் சச்சின் - கோலி இடையே உள்ள வித்தியாசம் என்றும் கூறுகிறார். இவர் சொல்வது உண்மைதானா? டாப்-ஆர்டரில் பேட்ஸ்மேன்களான சச்சின் - கோலி இருவரும் எத்தனை போட்டிகளில் நாட்-அவுட் ஆக இருந்தார்கள் என்பதை பார்த்தால் ஓரளவு உண்மைதான் என தெரிகிறது.

நாட்-அவுட் எண்ணிக்கை

நாட்-அவுட் எண்ணிக்கை

சச்சின் 463 ஒருநாள் போட்டிகளில் 41 போட்டிகளில் நாட்-அவுட் ஆக இருந்துள்ளார். அதே சமயம், விராட் கோலி 227 போட்டிகளில் 37 போட்டிகளில் நாட்-அவுட்டாக இருந்துள்ளார். கோலி இந்த வித்தையை தோனியிடம் இருந்து தான் கற்றுக்கொண்டார் என்கிறார் பிக்கேல்.

உதவி தேவை

உதவி தேவை

மேலும், உலகக்கோப்பையில் மிடில் ஓவர்களில் பந்துவீச்சாளர்களை மாற்றுவதற்கு, தோனியின் உதவி கோலிக்கு தேவைப்படும். தோனியின் நீண்ட அனுபவம் அவருக்கு உதவும் என்றார் ஆன்டி பிக்கேல்.

Story first published: Tuesday, May 21, 2019, 16:34 [IST]
Other articles published on May 21, 2019
English summary
World cup 2019 : Andy Bichel experience of Dhoni has helped Virat Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X