For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன்பா.. தோனி, ரஸ்ஸல்.. ஐபிஎல் முடிஞ்சு போச்சுன்னு தெரியாதா? பழைய நினைப்பிலேயே இருந்தா எப்படி?

லண்டன் : உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியில் நேற்று இந்தியா - வங்கதேசம், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டு போட்டிகள் நடைபெற்றன.

இந்தியா ஒரு பக்கம் வெளுத்துக் கட்டி 359 ரன்கள் எடுத்தது. மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் ஒருபடி மேலே போய் 421 ரன்கள் எடுத்து மிரட்டியது. ஒரே நாளில் இரண்டு அணிகளும் தெறிக்கவிட்டன.

இந்த இரண்டு அணிகளிலும், தங்கள் அணி குறிப்பிட்ட அளவை தாண்டி அதிக ரன்கள் குவிக்க காரணமாக இருந்தவர்கள் - இந்தியாவின் தோனி, வெஸ்ட் இண்டீஸ்-இன் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

நான் நினைச்சது நடந்துடுச்சு.. இது போதும்.. பாசிட்டிவா இருக்கேன்.. கோலி உடைத்த ரகசியம்! நான் நினைச்சது நடந்துடுச்சு.. இது போதும்.. பாசிட்டிவா இருக்கேன்.. கோலி உடைத்த ரகசியம்!

ஐபிஎல் அதிரடி

ஐபிஎல் அதிரடி

இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரில் செம பார்மில் இருந்தார்கள். ஐபிஎல் தொடரில் தோனி 15 போட்டிகளில் 416 ரன்கள் குவித்தார். அவரது சராசரி - 83.20. ஸ்ட்ரைக் ரேட் - 134. ஆண்ட்ரே ரஸ்ஸல் 14 போட்டிகளில் 510 ரன்கள் குவித்தார். அவரது சராசரி - 57. ஸ்ட்ரைக் ரேட் - 205.

பயிற்சியில் ஸ்ட்ரைக் ரேட்

பயிற்சியில் ஸ்ட்ரைக் ரேட்

உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியில் இருவருமே கிட்டத்தட்ட இதே ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினர். தோனி 78 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் - 144, ஆண்ட்ரே ரஸ்ஸல் 25 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் - 216. சொல்லப் போனால், ஐபிஎல் தொடரின் ஸ்ட்ரைக் ரேட்டை விட கொஞ்சம் அதிகம்.

ஐபிஎல்தான் முடிஞ்சு போச்சே

ஐபிஎல்தான் முடிஞ்சு போச்சே

ஒருநாள் போட்டிகளிலும், அனுபவ வீரர்கள் தோனி, ஆண்ட்ரே ரஸ்ஸல் ஐபிஎல் போல ஆடி வருவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சிலர் "என்னப்பா.. ஐபிஎல்தான் முடிஞ்சு போச்சே.. அப்புறம் ஏன் இப்படி ஆடுறீங்க?" என கேட்டு தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

நீண்ட நேர ஆட்டம்

நீண்ட நேர ஆட்டம்

ரஸ்ஸல் கடைசி 10 ஓவர்களில் அதிரடி காட்ட வேண்டும் என அடித்து ஆடினார். ஆனால், தோனி, 23வது ஓவர் முதல் 49.2வது ஓவர் வரை களத்தில் நீண்ட நேரம் நின்று, அதிரடியாக ஆடினார்.

ஆடுகளம்

ஆடுகளம்

2019 உலகக்கோப்பை தொடரில் ஐபிஎல் தொடர் போல தோனி, ரஸ்ஸல் இன்னும் பல வீரர்கள் ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்து ஆடுகளங்கள் தட்டையாக இருப்பதுதான்.

அதிரடியாக ஆடலாம்

அதிரடியாக ஆடலாம்

அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதுதான். இந்த ஆடுகளங்களில் முதல் சில ஓவர்களை கடந்து விட்டால், அதன் பின் அதிரடி காட்டலாம் என கூறப்படுகிறது. அதிரடி ஆட்டத்தை விரும்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனி குஷிதான்.

Story first published: Wednesday, May 29, 2019, 12:21 [IST]
Other articles published on May 29, 2019
English summary
World cup 2019 : Dhoni and Andre Russell took IPL game to World cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X